திருமணத்துக்குப் பிறகும் இப்படியெல்லாம் வீடியோ வெளியிட்டா பாவம்.. எச்சில் ஊற வைத்த கீர்த்தி சுரேஷ்!

by Saranya M |   ( Updated:2025-04-03 06:28:55  )
திருமணத்துக்குப் பிறகும் இப்படியெல்லாம் வீடியோ வெளியிட்டா பாவம்.. எச்சில் ஊற வைத்த கீர்த்தி சுரேஷ்!
X

#image_title

நடிகை கீர்த்தி சுரேஷ் மேக்னம் ஐஸ் க்ரீமிற்காக நடித்திருந்த விளம்பரப்படம் வெளியாகியுள்ளது. அதில் கீர்த்தி சுரேஷ் ஐஸ்கிரீம் சாப்பிடும் அழகை பார்த்த ரசிகர்கள் வாயில் எச்சில் ஊறும்படி செய்துள்ளார்.

பைலட்ஸ், குபேரன், அச்சனே எனக்கு இஷ்டம் உள்ளிட்ட மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கிய கீர்த்தி சுரேஷ் நடிகை மேனகாவின் மகள் ஆவார். மேலும் அவர் மலையாளத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்திலிருந்து தொடங்கிய அவரது சினிமா வாழ்க்கை ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பாம்பு சட்டை, பைரவா, சாமி 2, சர்க்கார் என வளர்ச்சியடைந்தது.

மேலும், கீர்த்தி சுரேஷ் தான் 15 வருடங்களாக காதலித்து வந்த அந்தோணி தட்டில் என்பவரை சென்ற ஆண்டு மிக பிரம்மாண்டமாக கோவாவில் திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரகு தாத்தா மற்றும் பேபி ஜான் படங்களும் படுதோல்வியை சந்தித்த நிலையில், ரிவால்வர் ரீட்டா, அக்கா, கன்னிவேடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி உடையில் கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்னம் ஐஸ் க்ரீமிற்காக நடித்திருந்த விளம்பர படத்தை ஷேர் செய்துள்ளார். அதில் அவர் ஐஸ் க்ரீமில் வித விதமான டாப்பிங்ஸ் எல்லாம் போட்டு ரசித்து ருசித்து சாப்பிட்டு ரசிகர்களின் வாயில் வாட்டர் ஃபால்ஸையே வரவழைத்துள்ளார்.

Next Story