Categories: Cinema News latest news

நீங்க வருவீங்க… யார் உங்களுக்கு ஓட்டு போடுறது… விஜய் நடிகையின் அரசியல் ஆசை!

Keerthi suresh: தான் இப்போது நடிப்பில் தான் ஆர்வம் காட்டி வருகிறேன். விரைவில் அரசியலுக்கு வரலாம் என நடிகை கீர்த்தி சுரேஷ் சொன்ன விஷயம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முதல் படத்தில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் அவருக்கு வாய்ப்புகள் வந்துக்கொண்டு இருந்தது. சிவகார்த்திகேயனின் ரெமோ மற்றும் ரஜினி முருகன் திரைப்படம் இவரின் சினிமா கேரியரை உச்சத்துக்கு கொண்டு வந்தது.

இதையும் படிங்க: ஒன்னுல மூணு!… போட்டியில் இறங்கிய ஜோடிகள்… கோபத்தில் எழில்… மயிலு பிரச்னை முடிஞ்சிதா?

தொடர்ச்சியாக முன்னணி நடிகையாக கோலிவுட்டில் வலம் வந்தார். நடிகர் விஜயின் நடிப்பில் பைரவா மற்றும் சர்க்கார் படத்தில் இணைந்து நடித்தார். தொடர்ச்சியாக கீர்த்தி தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்துவந்தார்.

தற்போது ரகு தாத்தா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. தி பேமிலி மேன் வெப் சீரிஸுக்கு கதை எழுதிய சுமன் குமார் இயக்கி இருக்கிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைப்பு செய்து இருக்கிறார். கீர்த்தி சுரேஷுடன் எம்.எஸ்.பாஸ்கர், தேவத்ர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரகு தாத்தா படத்தின் புரோமோஷன் வேலைகள் தொடங்கி இருக்கிறது. இதில் கலந்துக்கொண்ட கீர்த்தி, நான் இந்தி படத்தில் நடித்துவிட்டு இந்தி எதிர்ப்பதாக பேசுகின்றனர். நான் இந்திக்கு எதிரியில்லை. இந்தி திணிப்புக்கு தான் எதிரி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராயுடனான விவாகரத்து பிரச்சனைக்கு ஃபுல் ஸ்டாப் வைத்த அபிஷேக் பச்சன்.. இத காட்டிட்டாரே

Published by
Akhilan