உதயநிதிக்கு கேக் ஊட்டிவிட்டு கல்தா கொடுத்த கீர்த்தி சுரேஷ்.! ஐயோ சார் அது நான் இல்ல..

by Manikandan |   ( Updated:2022-06-24 07:55:39  )
உதயநிதிக்கு கேக் ஊட்டிவிட்டு கல்தா கொடுத்த கீர்த்தி சுரேஷ்.! ஐயோ சார் அது நான் இல்ல..
X

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் நிறைய படங்களை தேர்வு செய்து அதனை வெளியிட்டு வந்தாலும், நல்ல கதைக்களம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து அதில் நடித்தும் வருகிறார்.

இவர் நடித்து அண்மையில் நெஞ்சுக்கு நீதி எனும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் பலரது பாராட்டுகளையும் பெற்றது. இதனை தொடர்ந்து பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் எனும் படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி.

இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். பகத் பாசில், வடிவேலு என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் தற்போது முடிந்துள்ளது. அடுத்த கட்ட ஷூட்டிங் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர் தேதி கொடுத்தால் எடுத்துவிடலாம். என்று கிண்டலாக உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டு விட்டார். அதோடு அந்த ஷூட்டிங் முடிந்ததற்கான போட்டோக்களையும் பதிவிட்டு இருந்தார். அதில் கீர்த்தி சுரேஷ், உதயநிதி மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோருக்கு கேக் ஊட்டி விடும் புகைப்படங்களும் இருந்தன.

இதையும் படியுங்களேன் - உம்மா கேட்ட ரசிகர்.. மாளவிகா கொடுத்த மாஸ் ரீப்ளே.. இது ஒன்னு போதும் காலத்துக்கும் நின்னு பேசும்...

இந்த ட்வீட்டை பார்த்த கீர்த்தி சுரேஷ், சற்று பதறிப்போய் ஐயோ சார் உங்களுடன் பணியாற்றுவது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது. இந்த பட வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி என பதிவிட்டு முடித்துவிட்டார். விரைவில் அவர் தேதி கொடுத்தால் அடுத்த கட்ட சூட்டிங் ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது.

Next Story