Cinema News
கீர்த்தி சுரேஷ்க்கு ஒரே நாள்ல ரெண்டு கல்யாணமா?.. இதுக்கு காரணம் மாப்பிள்ளை தானாமே!..
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ஒரே நாளில் 2 முறைப்படி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ்:
மலையாள சினிமாவில் கீதாஞ்சலி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அதன் பிறகு ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, சர்க்கார், தானா சேர்ந்த கூட்டம், மகாநதி உள்ளிட்ட படம் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: ஓடிடி-ல ரிலீஸ் பண்ணக்கூடாது!.. உயர்நீதிமன்றத்தில் வழக்கு.. அமரன் படத்துக்கு வந்த புது சிக்கல்..
தேசிய விருது:
தெலுங்கில் சாவித்திரி அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் மகாநதி. இந்த திரைப்படத்தில் சாவித்திரி அவர்களின் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக ஏற்று நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதனால் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இப்படத்திற்கு பிறகு நடிகை கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் அதிக அளவு உயர்ந்தது.
ஹிந்தி சினிமா:
தமிழ், தெலுங்கு உள்ளிட மொழிகளில் பிரபல நடிகையாக வளம் வந்த நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் பேபி ஜான் என்கின்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் மிகவும் கிளாமரான உடையில் நடித்திருந்தார். இதை பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. இப்படத்தில் பாடல் அனைத்திலும் நடிகை கீர்த்தி சுரேஷ் கிளாமர் லுக்கில் காட்சியளித்தார்.
கோவாவில் திருமணம்:
சினிமாவில் தொடர்ந்து பிரபல நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ். திடீரென்று தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. கீர்த்தி சுரேஷும், ஆண்டனி தட்டிலும் கடந்த 15 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவித்த காரணத்தால் வரும் டிசம்பர் 12ஆம் தேதி இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற இருக்கின்றது.
கீர்த்தி சுரேஷ் திருமணம் இரண்டு முறைப்படி நடைபெற இருக்கின்றதாம். அதற்கு காரணம் அவரின் காதலர் ஆன்டனி தானாம். ஏனென்றால் ஆண்டனி கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். கீர்த்தி சுரேஷ் இந்து மதத்தை சேர்ந்தவர். அதனால் இரண்டு முறைபடியும் திருமணம் நடைபெற இருக்கின்றதாம்.
இதையும் படிங்க: ரஜினிக்காக கதை சொன்ன டி.ஆர்…. எப்படியாப்பட்ட படம்? இப்படியா மிஸ் பண்ணுவாரு சூப்பர்ஸ்டார்?
காலையில் இந்து முறைப்படி திருமணமும், மாலையில் கிறிஸ்துவ முறைப்படி திருமணமும் நடைபெற இருக்கின்றது. டிசம்பர் 10-ம் தேதி திருமண கொண்டாட்டங்கள் கோவாவில் தொடங்கும் என்றும், டிசம்பர் 11ஆம் தேதி சங்கீத் நிகழ்ச்சி நடக்கும் என்று கூறி வருகிறார்கள். அதனை தொடர்ந்து மறுநாள் திருமணம் நடைபெற உள்ளது. இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.