அண்ணாத்த படத்திற்காக இப்படியா செய்வீங்க? கீர்த்தி சுரேஷ் செய்த வேலையால் வேதனையில் ரசிகர்கள்...!
சினிமாவை பொருத்தவரை அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அப்படி உள்ள நிலையில் அதற்கு வாய்ப்பு கிடைத்தால் யாரும் அந்த வாய்ப்பை தவறவிட மாட்டார்கள்.
ஆனால் அதே சமயம் அதைவிட வலுவான அதிக அழுத்தம் தரக்கூடிய இரண்டு கேரக்டர்கள் கிடைத்தால் சற்று யோசிப்போம் அல்லவா. ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்திற்காக தனக்கு கிடைத்த இரண்டு மிகப்பெரிய வாய்ப்புகளை தவறவிட்டுள்ளார்.
கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இது அந்த சமயத்தில் பல விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் ரஜினி என்ற ஒருவருக்காக அந்த படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் சம்மதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அண்ணாத்த படத்திற்காக இரண்டு சூப்பரான கேரக்டர்களை கீர்த்தி சுரேஷ் தவறவிட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி அண்ணாத்த படத்திற்காக பொன்னியின் செல்வன் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத காரணத்தால் கீர்த்தி சுரேஷ் மணிரத்னம் பட வாய்ப்பை வேண்டாம் என நிராகரித்துள்ளார்.
அதேபோல் அந்த சமயத்தில் கீர்த்தியை தேடி வந்த ஷியாம் சிங்காராய் பட வாய்ப்பையும் அவர் நிராகரித்துள்ளார். ஷியாம் சிங்காராய் படத்தில் சாய் பல்லவி நடித்த கேரக்டருக்கு முதலில் கீர்த்தியை தான் கேட்டுள்ளார்கள். ஆனால் அப்போது கீர்த்தி அண்ணாத்த படத்தில் பிசியாக இருந்ததால் முடியாது என கூறிவிட்டாராம்.
அதன் பின்னர் சாய் பல்லவி அந்த கேரக்டரில் நடித்து தற்போது பலரின் பாராட்டுக்களை பெற்று புகழின் உச்சியில் உள்ளார். ஒரு மொக்க படத்துக்காக இரண்டு பிரம்மாண்ட அதுவும் அருமையான கதாபாத்திரங்களை தவறவிட்டீங்களே கீர்த்தி என அவரின் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.