இவருக்கு எல்லாமே இவர்தானாம்..! வீட்டில் தனியாக இவருடன் ஆட்டம் போடும் நம்ம தங்கம்..
நடிகை கீர்த்திசுரேஷ் தென்னிந்திய சினிமா உலகத்தில் முன்னனி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர். மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா அவர்களின் மகளாவார். திரையுலக வாரிசு என்பதாலயோ என்னவோ நடிப்பில் பட்டையை கிளப்புகிறார்.
தமிழில் முதல் படமாக 'இது என்ன மாயம்' திரைப்படம் கோலிவுட்டில் நல்ல இடத்தை பெற்றுதந்தது.அதற்கடுத்து ஒன்றிரண்டு படங்கள் வெளியானலும் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்த ரஜினிமுருகன் படம் மாபெரும் வெற்றிபெற்று கீர்த்திசுரேஷின் அந்தஸ்தை தூக்கி நிறுத்தியது.
அதற்கடுத்தாக வெளிவந்த 'ரெமோ' படமும் மாபெரும் வெற்றிபெற தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவரானார் கீர்த்திசுரேஷ்.இக்காலகட்டத்தில் தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் வர அங்கும் சென்று தனது ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். மகாநதி படத்தில் சாவித்திரி அம்மா வேடத்தில் நடித்ததற்காக தேசிய விருதும் வாங்கி ஒரு முழு நடிகையாக உருவெடுத்துள்ளார்.
தற்போது தெலுங்கில் மகேஷ்பாபுடன் ஜோடி சேர்ந்திருக்கும் கீர்த்தி அப்படத்தில்" காலாவதி" என்ற பாடல் ஹிட் ஆகியுள்ளது. அந்த பாடலுக்கு அவர் ரீல்ஸ் வீடியோ ஒன்றை தான் வளர்க்கும் செல்லப்பிராணியுடன் சேர்ந்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பு போக அவர் தன் முழு நேரத்தையும் தன் நாயுடன் தான் கழித்துவருகிறார். அந்த வீடியோவுக்கு நிறைய லைக்ஸ் வந்து குவிந்துள்ளது.
இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/CaOjZhmpB-w/?utm_source=ig_web_copy_link