ஒரே ஒரு போஸ்ட் தான்.... கீர்த்தி சுரேஷுக்கு எதிராக திரும்பிய ஒட்டுமொத்த சோசியல் மீடியா....!
பெரும்பாலான நடிகைகள் தங்கள் வீடுகளில் செல்லப் பிராணியாக உயர் ரக நாய்களை வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நடிகை த்ரிஷா அவரின் வீட்டில் நிறைய நாய்களை வளர்த்து வருகிறார். அவரை போலவே நடிகை கீர்த்தி சுரேஷும் அவரது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தனது செல்லப்பிராணியான நாயுடன் இணைந்து அழகான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் சமீபத்தில் தனது நாயுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை கீர்த்தி புதிவு செய்திருந்தார்.
தற்போது அந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காரணம்
தனது நாயை மிஸ் செய்வதாக கூறி கீர்த்தி சுரேஷ் பதிவு செய்துள்ள அந்த போட்டோவில், தனது காலுக்கு அடியில், நாய் நிற்பதும், தனது இரு கால்களால் அதன் கழுத்தை நெரிப்பது போன்று அணைத்து நிற்கும் விதமாக கீர்த்தி சுரேஷ் போஸ் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த புகைப்படத்தை கண்ட சிலர், "என்ன கீர்த்தி இதெல்லாம்?வாயில்லா ஜீவனை இப்படி கொடுமைப்படுத்தலாமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலரோ என்ன தான் நாம் வளர்க்கும் நாயாக இருந்தாலும், அதை காலுக்கு அடியில் போட்டு இப்படி கேவலப்படுத்தலாமா என்று கீர்த்தியை பயங்கரமாக விமர்சனம் செய்ய தொடங்கி விட்டனர்.
இருப்பினும் சிலர் கீர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் வருகிறார்கள். ஒரே ஒரு போஸ்ட் போட்டு மொத்த இமேஜையும் டேமேஜ் செய்து கொண்ட கீர்த்தி தற்போது அப்செட்டில் உள்ளாராம். இனிமே எது பண்ணாலும் பார்த்து தான் பண்ணனும்.