Connect with us

உனக்கு கிடைச்சது எங்களுக்கு கிடைக்கலயே….? நடிகைகள் முன் கெத்து காட்டும் கீர்த்தி….!

keerthy1_main_cine

Cinema News

உனக்கு கிடைச்சது எங்களுக்கு கிடைக்கலயே….? நடிகைகள் முன் கெத்து காட்டும் கீர்த்தி….!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிக்க வந்த புதிதில் ஒரு லவ் ஸ்டோரி, படத்திற்கு கண்டிப்பாக ஒரு ஹீரோயின் அவசியம் என்பது போன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வந்தார்.

keerthy_main_cine

ஆனால் தற்போது நடிக்கும் கதாபாத்திரம் மக்களை எப்படி போய் சென்றடைகிறது என ஆராய்ந்து ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் மகாநதி படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி அம்மாளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

இதையும் படிங்கள் : லெக் பீஸ் கும்முன்னு இருக்கு!..நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அரபிக்குத்து பாடகி…

அதன்பிறகு கீர்த்தி சுரேஷ்க்கு என்று ஒரு மார்க்கெட் உயர்ந்தது. இவர் தற்போது நடித்து ஓடிடியில் வெளியான சாணிகாயிதம் படம் அந்த அளவுக்கு வரவேற்ப்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. அந்த படத்தில் அவரின் நடிப்பு வாயடைக்க வைத்து விட்டது.

keerthy2_cine

இந்த நிலையில் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து சர்கார் வாரி பாட்டா ரிலீஸானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் படம் என்பதால் அங்கு உள்ள ரசிகர்கள் அவருக்கு கட் அவுட் வைத்து கொண்டாடினர். அதேபோல் கீர்த்தி சுரேஷ்க்கும் கட் அவுட் வைத்து தங்கள் ஆர்ப்பரிக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். கீர்த்தி சுரேஷ்க்கு தமிழில் ரசிகர்கள் அதிகமாக இருந்தாலும் படவாய்ப்புகள் குறைந்து வருவதால் தெலுங்கில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதே போல் சினிமாவில் வேற எந்த நடிகைக்கும் இந்த மாதிரி கட் அவுட் வைத்து கொண்டாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top