தமிழ் சினிமாவில் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ஆடுகளம், வட சென்னை, விசாரணை, அசுரன், விடுதலை, விடுதலை 2 ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறினார்.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலிருந்தும் முக்கிய நடிகர்கள் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்கள். ஜூனியர் என்.டி.ஆர் கூட தான் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதக கூறினார். தற்போது வெற்றிமாறன் சிம்புவை வைத்து அரசன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். மேலும், அனிருத் இசையமைத்து வருகிறார். வட சென்னை படத்தின் கிளைக்கதையாக அரசன் படத்தை வெற்றிமாறன் உருவாக்கி வருகிறார்.
ஒருபக்கம் சத்தமே இல்லாமல் கென் கருணாசை வைத்து ராஜன் வகையறா என்கிற திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கென் கருணாஸ், அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். வட சென்னை திரைப்படத்தில் அமீர் நடித்த கதாபாத்திரத்தின் சிறு வயது கதாபாத்திரமாக கென் கருணாஸ் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான், இன்று வெற்றிமாறனுக்கு பிறந்த நாள் என்பதால் ராஜன் வகையறா ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை கென் கருணாஸ் தனது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.







