latest news

படத்தோட பட்ஜெட்டை ஒரே நாளில் அள்ளிய யூத்!.. புரட்யூசருக்கு காசு கொட்டுதாம்!…

சமீப காலமாக மிகவும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்படும் தமிழ் திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெறுவது அதிகரித்து வருகிறது. டூரிஸ்ட் பேமிலி, குட் நைட், லவ் டுடே போன்ற படங்களில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் கென் கருணாஸ் இயக்கி நடித்திருக்கும் யூத் திரைப்படமும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

நடிகர் கருணாஷின் மகனான கென் கருணாஸ் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இயக்கத்தை கற்றுக்கொண்டார். தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்திலில் தனுஷின் மகனாக நடித்திருந்தார். தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் இயக்கி நடித்துள்ள யூத் படத்தில் அனிஷ்மா அனில்குமார், தேவதர்ஷினி, நளினி, சுராஜ் வெஞ்சுரமுடு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்கான புரமோ வீடியோக்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது.
இந்த படத்துக்கு பட்ஜெட் ஐந்தரை கோடி என சொல்லப்படுகிறது. இதில் ஆச்சரியம் என்னவெனில் படத்தின் பட்ஜெட்டை இந்த படம் முதல் நாளே வசூல் செய்து விட்டதாம்.

அதாவது இந்தியாவில் நான்கு கோடியும் வெளிநாட்டு வசூலையும் சேர்த்தால் இந்த படம் ஐந்தரை கோடியை தொட்டிருக்கும் என்கிறார்கள். இனிமேல் வருவது எல்லாமே லாப தான். எனவே யூத் திரைப்படம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் அதிபர்கள் என எல்லோருக்கும் பல கோடி லாபங்களை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

12 hours ago