தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. ஜெயம் படத்தில் நடிக்க துவங்கி தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். பல நூறு கோடி வசூலிப்பதில்லை என்றாலும் ஜெயம் ரவிவை வைத்து படமெடுத்தால் படம் லாபம் என்கிற நிலையை உருவாக்கினார்.
ஒருபக்கம் மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்தார். ரவியும், அவரின் மனைவி ஆர்த்தியும் மாறி மாறி சொல்லிக்கொண்ட புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருபக்கம், பாடகி கெனிஷா என்பவரோடு நெருக்கமானார் ரவி. இந்நிலையில்தான் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் இன்று காலை உலகமெங்கும் வெளியானது.
இந்த படத்தில் ஹீரோ சிவகார்த்திகேயன் என்பது போல காட்டப்பட்டாலும் உண்மையில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி ஆகிய எல்லோருக்குமே முக்கியமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, முதல்முறையாக பராசக்தி படத்தில் ரவி வில்லனாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில், படம் பார்த்து விட்டு வெளியே வந்த கெனிஷா செய்தியாளர்களிடம் ‘ரவிக்காக மட்டும்தான் பராசக்தி ஓடும்.. என் கண்ணுக்கு வேற யாரும் தெரியல.. அவருக்காகவே இந்த படம் பண்ண மாதிரி இருக்கு.. இந்த படத்துல அவர்தான் நம்பர் ஒன்.. செகண்ட் ஆஃபில் அவரை தாண்டி படமே இல்லை’ என பேசியிருக்கிறார். ஏற்கனவே இந்த படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரும் நிலையில் கெனிஷாவின் கமெண்ட் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
