தமிழ்நாட்டு சிஎம் கூட பண்ணாத விஷயம் கேரளாவில் அம்மாநில முதல்வர் மூலமாக சிவகார்த்திகேயனுக்கு நடந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் வசூல் ரீதியாக பல கோடிகளை அள்ளியது நமக்கு தெரிந்தது தான். ஆனால், இப்படம் தமிழகத்தில் மட்டுமல்ல, அதை தாண்டியும் சிவகார்த்தியேனுக்கு நல்ல புகழை தேடி தந்தது. குறிப்பாக கேரளாவில் அவருக்கு அதிகளவில் ரசிகர்களை பெற்று தந்தது. இப்படத்தில் கேரளத்து பெண்ணை காதலித்து திருமணம் செய்வது போல் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் ‘ஓய் மம்மூட்டி’ வசனமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் எங்கு சென்றாலும் ‘ஓய் மம்மூட்டி’ என்று கூறியே அழைக்கும் வழக்கம் உருவானது.
தற்போது அடுத்த படமாக சுதா கொங்காரா உடன் பராசக்தி படமும், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உடன் இணைந்து மாதராஸி திரைப்படமும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படங்களின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும்நிலையில், அதற்கு சின்ன பிரேக் எடுத்து நமது அண்டை மாநிலமான கேரளாவுக்கு விசிட் அடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராயி ஊரில் உள்ள கல்லூரி விழா ஒன்றில் சிவகார்த்திகேயன் பங்கேற்றுள்ளார்.
ஆம், கேரள முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊர் தான் பினராயி. அந்த ஊரில் உள்ள கல்லூரியின் கல்ச்சுரல் விழாவில் சிவா பங்கேற்றிருக்கிறார். இதே விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மலையாள நடிகர் ஆசிப் அலி உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர். விழாவுக்கு முன்னதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் சிவகார்த்திகேயனுக்கு தடபுடல் விருந்து வழங்கப்பட்டிருக்கிறது. உணவை சுவைத்த கையோடு பினராயி விஜயன் உடனே விழாவுக்கு சென்றிருக்கிறார் சிவா.

கேரள முதல்வர் பினராயி விஜயன் இரண்டாவதாக ஒரு தமிழ் நடிகருக்கு விருந்து வைத்துள்ளார் என்றால் அது சிவாதான். சிவாவுக்கு முன்னதாக ஒரு நடிகருக்கு பினராயி விஜயன் விருந்து வைத்துள்ளார்.
அது நமது உலக நாயகன் கமல்ஹாசனுக்கு தான். கமலுக்கு அடுத்தபடியாக சிவாவுக்கு தான் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரபல நடிகராக சிவகார்த்திகேயன் வளர்ந்து தமிழகத்தில் உள்ள சிஎம் குடும்பத்துடன் நெருக்கமான உறவையே பேணி வருகிறார். எனினும், தமிழ்நாட்டு சிஎம் கூடாத பண்ணாத விஷயம், கிடைக்காத வரவேற்பு, கேரளாவில் அம்மாநில சிஎம் மூலமாக கிடைத்திருப்பதாக அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.