அடிச்சி தூக்கிய கேஜிஎஃப் -2... முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?....

by சிவா |
kgf
X

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப். இப்படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கியிருந்தார். அதிரடி ஆக்‌ஷன் படமாக வெளிவந்த இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

தற்போது அப்படத்தின் தொடர்ச்சியாக கே.ஜி.எஃப் - 2 திரைப்படம் கடந்த 14ம் தேதி வெளியானது. விஜயின் பீஸ்ட் படம் வெளியான நிலையில், இப்படமும் போட்டிக்கு வெளியாகியுள்ளது. பீஸ்ட் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற கே.ஜி.எஃப்-2 படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் மற்றும் திரைக்கதை ஆகியவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்படம் உலக அளவில் முதல் நாளில் ரூ.175 கோடி வசூலையும், இந்தியாவில் ரூ.135 கோடியையும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story