Connect with us

Cinema News

தமிழகத்தில் தளபதியை ஓரம்கட்டி வரும் கே.ஜி.எப்-2.! வெளியான உண்மை விவரங்கள்.!

நேற்று தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் , இந்தி என 5 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது. அதேபோல் இன்று கேஜிஎப் இரண்டாம்பாகமும் உலகம் முழுக்க வெளியாகி உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆனதால் இந்த இரண்டு படங்களுக்கும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது.

தமிழகத்தில் வழக்கம் போல விஜயின் ஆதிக்கம்தான். பீஸ்ட் படத்திற்கு தான் முதல் சாய்ஸ் எனும் நிலை இருந்தது. அதற்கேற்றார்போல தான் தமிழகத்தில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. சுமார் 1000 திரையரங்குகளில் இருக்கும் தமிழகத்தில் 800 திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது.

மீதமுள்ள 200 திரையரங்குகளில் தான் கே ஜி எஃப்-2 திரைப்படம் வெளியாகும் என முன்னர் தகவல் வெளியானது. ஆனால், நேற்று வெளியான விஜய்திரைபடம் சரியான வரவேற்பை பெற தவறியதால் தற்போது கே.ஜி.எப் 2 படத்திற்கு அது இன்னும் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்களேன் – எனக்கு இத விட்டா வேற வழி தெரியல.! சரணடைந்த ராக்கி பாய்.! அடுத்து என்ன.?!

ஆம், இன்று தமிழகத்தில் கே.ஜி.எப்-2 படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியர் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கேஜிஎப் 2 திரைப்படம் 350 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் பீஸ்ட் திரைப்படத்தின் திரையரங்கு எண்ணிக்கை குறைந்துள்ளது. என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல கே ஜி எஃப் இரண்டாம் பாகத்திற்கு மல்டிபிளக்ஸ் காட்சிகள் அதிகப்படுத்தி வருகின்றனராம்.

அடுத்தடுத்த வாரங்களில் தமிழகத்தில் எந்த திரைப்படம் அதிக வசூல் பெறும் என்பது போகப்போகத்தான் தெரியும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top