கேஜிஎஃப் கனெக்‌ஷன் சலார் படத்தில் இருக்கா..? நச் பதிலால் வாயடைக்க செய்த பிரசாந்த் நீல்..!

by Akhilan |
கேஜிஎஃப் கனெக்‌ஷன் சலார் படத்தில் இருக்கா..? நச் பதிலால் வாயடைக்க செய்த பிரசாந்த் நீல்..!
X

Salaar: தற்போதைய சினிமா ட்ரெண்ட்டுக்கள் யுனிவர்ஸ் கான்செப்டில் தான் உருவாகி வருகிறது. அந்த வகையில் சலார் படத்தில் கேஜிஎஃப் படம் இணையுமா என ப்ரசாந்த் நீல்லிற்கு ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் அவர் சொன்ன தகவல் தற்போது ஆச்சரியத்தினை உருவாக்கி இருக்கிறது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான திரைப்படம் கே.ஜி.எஃப். இப்படத்தில் யாஷ் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். படத்தில் பிரம்மாண்டம் இருந்ததை விட ஹீரோ காட்சிகள் தான் நிறைய லைக்ஸ் குவித்தது. எல்லா வசனங்களும் இளைஞர்களிடம் வைரலானது.

இதையும் படிங்க: எனக்கு ஒன்னும் தர மாட்டீங்களா?!.. எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய ஒரே பரிசு அதுதான்!..

இதை தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்போ எப்போ என எதிர்பார்த்து காத்திருந்தனர். கோலிவுட் முன்னணி ஸ்டார் விஜயுடன் மோதி ஜெயித்தது கேஜிஎஃப் இரண்டாம் பாகம் தான். கிட்டத்தட்ட தமிழகமே கொண்டாடி தீர்த்தது. இதை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கி இருக்கும் திரைப்படம் சலார்.

இப்படத்தில் பிரித்விராஜ், பிரபாஸ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர். ஹோம்லே நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருக்கிறது. இப்படம் நண்பர்களின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸாக லைக்ஸ் குவித்து வருகிறது.

இதையும் படிங்க: அப்பாவுக்காக கொஞ்சமா செஞ்சாலும் தப்பு தான் முத்து… கூட்டத்தில் மொத்தமாக ரவிக்கு, மனோஜுக்கும் ஆப்பா..!

இந்நிலையில் இப்படத்தில் கேஜிஎஃப் கனெக்‌ஷன் இருக்குமா என பலரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். கிட்டத்தட்ட இந்த விஷயம் டீசர் வெளியான போதே கண்டிப்பாக யாஷ் சில காட்சிகள் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது சலார் படத்தின் ரிலீஸும் நெருங்கிவிட்டது. இயக்குனர் பிரசாந்த் நீல் கலந்துக்கொண்ட பேட்டியில் இதே கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில், டீசர் வெளியான போதே இந்த தகவல் பரவியது. அப்போதே நான் வந்து இதை சொல்லி இருக்கணும். கேஜிஎஃப் கதை சலாருடன் எந்த இடத்திலும் இடம் பெறாது என ஓபனாக உடைத்து இருக்கிறார். யாஷை வைத்து இருந்தால் அந்த காட்சி சலாரை பாதிக்கும் என்பது பிரசாந்த் நீல்லின் எண்ணமாக இருக்கலாம் என்ற பேச்சுகள் உருவாகி இருக்கிறது.

Next Story