வீர ராகவனை அடிச்சி தூக்கிய ராக்கி பாய்!...எத்தனை கோடி வசூல் தெரியுமா?...
விஜய் நடிப்பில் கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியிருந்தார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவான இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களையே ஈர்க்கவில்லை என செய்திகள் வெளியானது.
சமூக வலைத்தளங்களில் பீஸ்ட் படம் சரியில்லை என ரசிகர்கள் பேசும் பல வீடியோக்கள் வெளியானது. மேலும், படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் உலா வந்தது. முதல் நாள் ரூ.36 கோடிக்கு மேல் வசூல் செய்த இப்படம் அடுத்த நாளே வசூலில் அடி வாங்கியது.
ஒருபக்கம் 14ம் தேதி வெளியான கேஜிஎஃப் - 2 திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. நல்ல வசூலும் பெற்று வருகிறது. ஒருபக்கம், பீஸ்ட் படத்திற்கு திரையரங்குகள் குறைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று அதாவது 15ம் தேதி தமிழகத்தில் கேஜிஎஃப்-2 ரூ. 10.61 கோடியை வசூல் செய்த நிலையில், பீஸ்ட் திரைப்படம் ரூ. 7.21 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. தமிழகத்தில் கேஜிஎஃப்-2 முதல் நாளில் ரூ.8.24 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.10.61 கோடியையும் வசூல் செய்துள்ளது. இன்று ரூ.18 கோடி வரை வசூல் செய்யும் என கணிக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் ஆந்திரா, வட மாநிலங்களிலும் கேஜிஎஃப்-2 படம் வசூலை வாரி குவித்து வருகிறது.
பீஸ்ட் படத்தின் வசூல் குறைந்து கேஜிஎஃப்-2 படத்தின் வசூல் அதிகரித்து செல்வது பீஸ்ட் படக்குழுவினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இப்படியே போனால் தமிழகத்தில் பீஸ்ட் படத்தின் வசூலை விட கேஜிஎஃப்-2 அதிக வசூலை பெற்றாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.