
Cinema News
கே.ஜி.எப் ‘மாஸ்’ பிரபலம் திடீர் மரணம்.! பேரதிர்ச்சியில் திரையுலகம்.!
அண்மையில் வெளியாகி இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸை கதிகலங்க வைத்து வரும் கே.ஜி.எப் 2 திரைப்படத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. அந்த படத்தில் ஹீரோ யாஷ், வில்லன் சஞ்சய் தத் மட்டுமல்ல அந்த படத்தில் ஒரு காட்சியில் வந்தார்கள் கூட ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.
அப்படி ஒருவர் தான் மோகன் ஜுனேஜா என்ற கன்னட நடிகர். இவர் அந்த படத்தில் என்ன கதாபாத்திரம் என்றெல்லாம் தெரியாது. ஆனாலும் இவருக்கு தியேட்டரில் விசில் பறந்தது. இவர் ராக்கி பாய்க்கு கொடுக்கும் மாஸ் பில்டப் வசனம் தியேட்டரை தெறிக்கவிட்டது.
முதல் பாகம் மட்டுமல்லாது, இரண்டாம் பக்கத்திலும் நடித்து ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளார் மோகன் ஜுனேஜா. இவருக்கு வயது 54 ஆகிறது. இன்று சனிக்கிழமையன்று இவர் உடல்நலக்குறைவு காரணமாக திடீரெனெ இறந்துவிட்டார்.
இதையும் படியுங்களேன் – 25 வருட சீக்ரெட்.! ஏ.வி.எம் நிறுவனத்தையையே அலறவிட்ட ‘அந்த’ புதுமுக இயக்குனர்.!?
இவர் நீண்ட நாட்களாக தீராத உடல்நலக்குறைவில் இருந்தவருக்கு பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு சிகிச்சை பெற்ற இவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதனை குறிப்பிட்டு, கே.ஜி.எப் பட தயாரிப்பு நிறுவனம் இவரது மறைவிற்கு இரங்கலை தெரிவித்து உள்ளது.
ಕನ್ನಡದ ಖ್ಯಾತ ಹಾಸ್ಯ ನಟರಾದ ಮೋಹನ್ ಜುನೇಜಾ ಅವರ ಆತ್ಮಕ್ಕೆ ಶಾಂತಿ ಸಿಗಲಿ.
ನಮ್ಮ ಕೆಜಿಎಫ್ ಚಿತ್ರ ತಂಡದ ಜತೆಗಿನ ಅವರ ಅವಿನಾಭಾವ ಸಂಬಂಧ ಮರೆಯಲಾರೆವು.
Our heartfelt Condolences to actor Mohan Juneja’s family, friends & well-wishers. He was one of the best-known faces in Kannada films & our KGF family. pic.twitter.com/xDDHanWuY0
— Hombale Films (@hombalefilms) May 7, 2022