
Cinema News
நான் உண்மையை உடைக்கிறேன்…கே.ஜி.எஃப் பற்றிய மர்ம முடிச்சை அவிழ்க்கும் பா.ரஞ்சித்…!
சமீபத்தில் இந்திய சினிமாவையே புரட்டி போட்ட படம் பிரசாந்த நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப். இந்த படத்தில் கன்னட நடிகர் யஷ் ஹீரோவாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் படமாக்கப்பட்டு ஒரு பேன் இந்தியா படமாக வெளியானது.
திரையில் வெளியாகி ரசிகர்களின் மனதிலும் சரி, சினிமா பிரபலங்கள் மத்தியிலும் சரி ஒரு தாக்கத்தையே ஏற்படுத்தியது. சினிமா துறையில் பின் தங்கிய மொழி மாநிலமாக விளங்கும் கன்னட மொழியில் இருந்து இப்படி ஒரு படம் வெளிவந்தது எல்லாருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பல கோடி வசூல் சாதனையை பெற்று உலக அளவில் பிரம்மாண்டமாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்கள் : மஜாப்பா மஜாப்பா… ரவுண்ட் கம்பியில் ரெண்டையும் இழுத்துக்கட்டிய ரம்யா பாண்டியன்!
இந்த நிலையில் கே.ஜி.எஃப் என்பது ஒரு இடத்தை பற்றி குறிப்பதாகும். உண்மையிலயே அங்கு நடக்கும் நிகழ்வுகளை இந்த படத்தில் காட்டவில்லையாம்.அதே போல் ஒப்பனை செய்யப்பட்டு கதைக்கு ஏற்றாற் போல் மாற்றி அமைத்திருக்கிறாராம் இயக்குனர். அதனால் அங்கு உண்மையிலயே என்ன நடக்கிறது? என களப்பணி செய்து வருகிறாராம் இயக்குனர் பா.ரஞ்சித்.
அங்கு ஏராளமான தமிழ் மக்களின் உழைப்பும் ரத்தமும் சிதறிக் கிடக்கின்றனவாம். அதை அப்படியே நான் கண்முன் வந்து நிறுத்திகிறேன் என்று அதை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறாராம். அந்த படத்திற்கு நடிகர் விக்ரமை அணுகியுள்ளாராம். கன்னடாவில் யஷ் என்றால் அவருக்கு நிகராக தமிழில் நடிகர் விக்ரம் தான் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்தாரோ தெரியவில்லை. இருந்தாலும் தேதி எல்லாம் கேட்டு விட்டு படத்தை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட போகிறார்களாம். அப்போ தமிழில் உருவாகும் கே.ஜி.எஃப் கமெர்ஷியலா இல்லாமல் இருந்தால் சரி என்று கருத்துக்களை தெருவித்து வருகின்றனர்.