திரையுலகையே அதிரவிட்ட கே.ஜி.எஃப் பட இயக்குனர்...! என்னப்பா கொஞ்சம் கருணை காட்டுங்க...

ஓட்டுமொத்த திரையுலகமும் இன்னும் அந்த வியப்பில் இருந்து மீளவில்லை என்றே சொல்லலாம் கே.ஜி.எஃப் படத்தை பார்த்து. இந்திய சினிமாவில் கன்னட மொழியில் இருந்து இப்படி ஒரு படம் மிரட்டிக் கொண்டிருப்பது இதுவே முதல் முறை. 1000 கோடி வசூல் சாதனையை பெற்ற 4 வது படமாக கே.ஜி.எஃப் இருக்கிறது.
இந்த படத்தை அடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து சலால் என்ற படத்தை இயக்குகிறார். அதையடுத்து ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார். மாபெரும் சாதனை புரிந்த கே.ஜி.எஃப் படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட்டே வேற லெவல போய் விட்டது.
இந்த நிலையில் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் சிலர் இவரிடம் எங்களுக்கும் ஒரு தரமான படத்தை எடுத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுல பிரச்சினை என்னவெனில் இவரது மார்க்கெட்டை அறிந்த இவரே தன்னுடைய சம்பளத்தை 50 கோடி என பேசி உள்ளனர்.
அதற்கும் தெலுங்கு சினிமா சம்மதம் தெரிவித்துள்ளது.எவ்ளோ இருந்தால் என்ன? எங்களுக்கு ஒரு நல்ல படம் எடுத்து தர வேண்டும் என 50 கோடிக்கு தலையசைத்து விட்டார்கள். இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ராஜமௌலிக்கு அப்புறம் பிரசாந்த் நீல் தான் இருக்கிறார். இவர் தற்போது இயக்கும் சலால் படமும் வெற்றி படமாக அமைந்தால் 50 கோடியில் இருந்து 100 கோடி வரை உயர்த்துவார்
என்பதில் ஐயமில்லை.