விண்ணைத்தொடும் லாபத்தில் நாளைக்கு வெளியாகிறது கே.ஜி.எஃப் படம்...! புலம்பும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்..
பிரசாந்த் மீல் இயக்கத்தில் கனட மொழியில் நாளை வெளியாகும் படம் கே.ஜி.எஃப் பாகம் 2. இப்படத்தில் நடிகர் யாஷ் நாயகனாக நடிக்கிறார். ஏற்கெனவே கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் இவருடன் சேர்ந்து நாயகியாக ஸ்ரீனிதி ஷெட்டி நடித்திருப்பார். இந்த படம் வெளியாகி நல்ல வெற்றியையும் லாபத்தையும் பெற்றது.
இதன் முதல்பாகம் வெளிவந்த முதலே எப்பொழுது இரண்டாம் பாகம் வரும் என ஆர்வமாக ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டனர், அந்த அளவுக்கு அமோக வரவேற்பை பெற்ற படம். இந்த நிலையில் இரண்டாம் பாகம் நாளை வெளியாகும் நிலையில் இந்த் படத்திற்கான வியாபாரமும் உலக அரங்கில் யாரும் எதிர்பாக்காத வகையில் எகிறியுள்ளது.
கனடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு எல்லா மொழிகளையும் சேர்ந்து மொத்த வியாபாரம் 400 கோடியை எட்டியுள்ளதாம் ஆக மொத்தம் வசூல் சாதனை 1000 கோடியை எட்டி விடும் என்கிறார்கள். 100 கோடி பட்ஜட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது.
இதையும் படிங்களேன் : மாஸ்க் சைசுல டிராயர்… அந்த இடத்தை படம் பிடித்து காட்டிய பூனம் பாஜ்வா!
இதில் இப்படி என்றாம் தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு மட்டும் 50 முதல் 120 கோடி வரை சம்பளம் கொடுக்கிறார்கள். படத்தோட பட்ஜட் 150 கோடி வரை எடுக்கப்படுகிறது. ஆகவே இந்த் நிலைமையில் படத்தின் வசூல் சாதனை 200 லிருந்து 250 வரைதான் கிடைக்கிறது என தமிழ் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர்.