
Cinema News
ராக்கி பாயிடம் தோற்றுப்போன விஜய்…அடுத்த படமாவது ஹிட் அடிக்குமா?!….
விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களால் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. முதல் நாளில் ரூ.36 கோடிக்கும் மேல் வசூல் செய்த இப்படம் அடுத்த நாளில் இருந்து குறைவான வசூலையே பெற்றது.
ஒருபக்கம் பீஸ்ட் படம் சரியில்லை என்கிற விமர்சனமும், ஒருபக்கம் கேஜிஎப்-2 படம் மாஸாக இருக்கிறது என்கிற விமர்சனமும் எழுந்ததால் ரசிகர்கள் கேஜிஎப்-2 ஓடும் திரையரங்குகள் பக்கம் சென்றனர். எனவே, பீஸ்ட் படத்திற்கு தியேட்டர்கள் குறைக்கப்பட்டு கேஜிஎப்-2 படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டது.
தமிழகத்தில் பீஸ்ட் படம் வெளியாகி முதல் வாரத்தில் இப்படம் ரூ.58.85 கோடியை வசூல் செய்தது. அவ்வளவுதான். அதன் இப்படத்தின் வசூல் அதாள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. 2வது வாரம் ரூ. 5.67 கோடி, 3வது வாரம் ரூ. 0.72 கோடி, 4வது வாரம் துவங்கி 2 நாட்கள் ஆகிய நிலையில் ரூ. 0.04 கோடி என மொத்தம் பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் ரூ. 65.28 கோடியை மட்டுமே வசூல் செய்துள்ளது.
ஆனால், கேஜிஎப்-2 திரைப்படம் முதல் வாரத்தில் 59.84 கோடி, 2வது வாரம் ரூ.32.65 கோடி, 3 வாரத்தில் ரூ.21.30 கோடி என இதுவரை இப்படம் தமிழகத்தில் ரூ.113.79 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதாவது, சூப்பர்ஸ்டார், தளபதி,வசூல் மன்னன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட விஜயின் படத்தை விட ஒரு கன்னட டப்பிங் படமான கேஜிஎப்2 பல கோடிகள் சேர்த்து வசூல் செய்து தியேட்டர் அதிபர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.
அடுத்து விஜய் ஒரு நேரடி தெலுங்கு-தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இந்த திரைப்படம் விஜயின் மார்க்கெட்டை மாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.