இது என்னடா டைட்டில்?!.. கேஜிஎப் ரேஞ்சிக்கு பில்டப்!.. எடுபடுமா கமல் 234?!.. டைட்டில் வீடியோ பாருங்க!..

கமலும், மணிரத்னமும் இணைந்து உருவான நாயகன் திரைப்படம் 1987ம் வருடம் வெளியானது. அதன்பின் இருவரும் மீண்டும் இணையவே இல்லை. இவர்கள் எப்போது மீண்டும் இணைவார்கள் என ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அது நடக்கவே இல்லை.
இந்நிலையில், 36 வருடங்களுக்கு பின் கமலும் மணிரத்னமும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கே.வி. ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், மலையாள நடிகர் துல்கர் சல்மான் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும், இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.
இதையும் படிங்க: துக் லைஃப் நாயகன் படத்தின் இரண்டாம் பாகமா? யாகுசாவாக வந்து மிரட்டும் கமலுக்கு அடுத்த மைல் கல்லா?
இன்று காலை இப்படத்தின் போஸ்டர் வெளியானது. இதைப்பார்க்கும்போது இப்படம் ஒரு பீரியட் படமாக உருவாகியுள்ளது என பலருக்கும் தோன்றியது ஏனெனில், கமலின் தோற்றம் வித்தியாசமாக இருந்தது. இந்நிலையில்தான் இப்போது இப்படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘தக் லைவ்’ (Thug Life) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதைப்பார்க்குபோது கண்டிப்பாக இப்படம் ஒரு பீரியட் படம்தான் என உறுதியாகியுள்ளது. இதில் பேசும் கமல்ஹாசன் ‘என் பெயர் சக்திவேல் நாயக்கர். என்னை கேங்ஸ்டர் என சொல்வார்கள்’ என அசத்தலாக வசனம் பேசுகிறார். படத்தின் கலரை பார்க்கும்போது இப்படம் கேஜிஎப் படம் போல அதிரடி ஆக்ஷன் கதையாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல வருடங்கள் கழித்து இப்படத்தில் கமலும் மணிரத்தினமும் இணைந்திருப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.