எங்க அப்பா செஞ்சதெல்லாம் இனிச்சிதா? பிரச்னையை முடிக்க சொன்னா லிஸ்ட் போட்டு குட்டு வாங்கும் கதிஜா ரஹ்மான்…
மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை சென்னை பனையூரில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு இசை கச்சேரியை நடத்தினார். இதற்கு முன்னரே ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, மழையால் ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது நடத்தப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய பேசுபொருளாகி இருக்கிறது.
இதையும் படிங்க: பாடல் வரிகளை பார்த்து நாள் முழுவதும் அழுத எம்.எஸ்.வி!.. எந்த பாடல் தெரியுமா?…
முறையான கட்டுப்பாடு இல்லாமல் எக்கசக்கமாக டிக்கெட் விற்று இருக்கின்றனர். சீட்டிங் அரேஞ்மெண்டும் சரியாக இல்லாமல் பல குளறுபடிகள் நடந்தது. மேலும் நிகழ்ச்சி நடந்த பகுதி மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது.
இந்நிலையில் அவருக்கு ஆதரவாக பல நடிகர்கள் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரின் மகள் கதிஜா ரஹ்மான் ட்விட்டரில் தந்தை கொடையாக செய்த நிகழ்ச்சிகளை எல்லாம் லிஸ்ட் போட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: 39 வயசுலயும் சும்மா கின்னுன்னு இருக்கேன்!.. நீங்க என்னடா பாடி ஷேம் பண்றது.. பட்டாசா வெடித்த பிரியாமணி!
நெஞ்சே எழு இசை கச்சேரி, கோவிட் காலத்தில் செய்த நிகழ்ச்சி, லைட்மேன் குடும்பங்களுக்காக செய்த கச்சேரி, கேரள வெள்ளத்துக்காக செய்த நிகழ்ச்சி என பல தொண்டாக விஷயத்தினை இப்படியா சொல்லிக்காட்டுவீங்க என ஒருசிலர் தொடர்ச்சியாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நானே பொறுப்பேத்துக்கிறேன் என ரஹ்மானும், எல்லா மியூசிக் கச்சேரியை நடத்தியவர்கள் தப்பு. ஆனா எங்க அப்பா ஏத்துக்கிட்டாரு என இருவரும் சொல்றீங்க. நிகழ்ச்சியை பார்க்காதவர்களின் டிக்கெட் காசை கொடுத்துடுறோமுனு ஒரு வார்த்தை வர மாட்டிங்குதே என பலரும் கமெண்ட் தட்டி வருகின்றனர்.