கார்த்திக் - குஷ்பு இடையே எழுந்த மோதல்!.. ஆனா அது மட்டும் நடக்காம போயிருந்தா!..
நடிகை குஷ்பு வருஷம் 16 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர். இப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் கார்த்திக். கார்த்திக் மிகவும் கலகலப்பானவர். தன்னுடைய முதல் பட ஹீரோ. எனவே, அவருடன் நன்றாக நட்புடன் பழகினார் குஷ்பு. அதேபோல், கிழக்குவாசல் படத்திலும் கார்த்திக்குடன் குஷ்பு நடித்திருப்பார். ஆனால், சில காரணங்களால் கார்த்திக்கும், குஷ்புவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.
எனவே, தான் நடிக்கும் படத்தில் குஷ்பு கதாநாயகியாக நடிப்பதை கார்த்திக் விரும்ப மாட்டார். வேறு கதாநாயகியை போடுங்கள் என சொல்லிவிடுவாராம். அதேபோல்தான் குஷ்புவும். கார்த்திக்தான் ஹீரோ என்றால் அவரும் நடிக்க சம்மதிக்க மாட்டாரம். இப்படி சில வருடங்கள் போனது.
அப்போதுதான் ஆர்.ரகு என்பவர் ‘விக்னேஷ்வர்’ என்கிற படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் குஷ்புவிடம் சென்று கார்த்திக்தான் ஹீரோ என சொன்னதும் குஷ்பு நடிக்க சம்மதிக்கவில்லை. உங்கள் சொந்த கோபத்தை உங்கள் தொழில் விஷயத்தில் காட்டக்கூடாது என அறிவுரை செய்தாராம். அதன்பின்னரே அப்படத்தில் நடிக்க குஷ்பு சம்மதித்தாராம். இப்படம் 1991ம் ஆண்டு வெளியானது. அதன்பின் இது நம்ம பூமி என்கிற படத்திலும் கார்த்தியுடன் இணைந்து குஷ்பு நடித்திருந்தார். மேலும், இருவரும் நல்ல நண்பர்களாகவும் மாறிவிட்டனர்.
கார்த்திக்குடன் தனக்குள்ள நட்பு பற்றி ஒரு பேட்டியில் பேசிய குஷ்பு ‘அன்றைக்கு மட்டும் அந்த இயக்குனர் எனக்கு அறிவுரை கூறவில்லை எனில் ஒரு நல்ல நண்பரை இழந்திருப்பேன்’ என நெகிழ்ச்சியாக கூறினார். அதேபோல் ஒரு மேடையில் குஷ்புவுடனான நட்பு பற்றி கார்த்திக்கிடம் கேட்டதற்கு ‘குஷ்புவை பற்றி பேசினால் நான் எமோஷனல் ஆகி விடுவேன். அதனால் வேண்டாம்’ என நெகிழ்ச்சியாக பதில் சொன்னது குறிப்பிடத்தக்கது.
பின்னாளில் குஷ்புவின் இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் சிறுமியானால் அதை செய்யவே மாட்டேன்!.. ஜெயலலிதா சொன்னது எதை தெரியுமா?..