தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் குஷ்பு. இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர். 1990களில் குஷ்புவும் பிரபுவும் மிகத் தீவிரமாக காதலித்து வந்தனர் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து கடந்த 2000 ஆம் ஆண்டு குஷ்பு, இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்துகொண்டார். தற்போது குஷ்பு, பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக செயலாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு ஆங்கில பேட்டியில் கலந்துகொண்ட குஷ்பு, “எனக்கு ஒரு முறைகேடான தொல்லை தரும் தந்தையே வாய்த்தார். எனது தாய் எனது தந்தை கொடுத்த தொல்லையால் மிகவும் கஷ்டப்பட்டார். குறிப்பாக நான் சிறு வயதில் இருக்கும்போதே எனக்கு பல முறைகேடான தொல்லை கொடுத்திருக்கிறார்” என கூறினார்.
அப்போது நிருபர்,”உங்களது தந்தை உங்களை அடித்தாரா அல்லது பாலியல் தொல்லை கொடுத்தாரா?” என கேட்டார். அதற்கு பதிலளித்த குஷ்பு, “எனது தந்தை இரண்டையுமே செய்தார். நான் சிறு வயது பெண்ணாக இருக்கும்போதே இவ்வாறு நடந்துகொண்டார். அவரை எனது அப்பா என்று என்றைக்கும் நான் கூறிக்கொண்டதில்லை.

16 வயதுக்கு பிறகு அவரை நான் சந்திக்கவே இல்லை. அவருடன் இருந்த தொடர்பை துண்டித்து விட்டேன். எனது தந்தையிடம் இருந்த பல கஷ்டங்களை அனுபவித்த எனது தாய் என்னை மிக தைரியமான பெண்ணாக வளர்த்தார்” என கூறினார். தற்போது குஷ்பு கொடுத்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இவ்வளவு வெளிப்படையாக குஷ்பு பேசியதால் அவரின் தைரியத்தை பல பெண்கள் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: நாவல்களில் இருந்து படமாக்கப்பட்டு மாஸ் ஹிட் ஆன படைப்புகள்… ஒரு பார்வை…
