ஹிந்தி நடிகைக்கு அள்ளிக்கொடுக்கும் சங்கர்.. இவ்வளவு கோடி சம்பளமா..?

Published on: October 1, 2021
---Advertisement---

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் இயக்குனர் சங்கர். நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர். அதன்பின் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த ஜெண்டில்மேன் படத்தின்மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

இப்படத்திற்குப் பின் தமிழ் சினிமாவில் இவருக்கு ஏறுமுகம்தான். இவர் தொட்டதெல்லாம் வெற்றியாக அமைந்தது. காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என மிகப்பிரண்டமாக இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் சற்று சறுக்கல்தான். இதன்பின் 2005ல் விக்ரமை வைத்து இவர் இயக்கிய அந்நியன் படம் இவருக்கு பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது. இதன்பின்னர் எந்திரன் படத்தின்மூலம் புகழின் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார் சங்கர்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகால இடைவேளைக்குப்பின் கமலை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கினார் சங்கர். ஆனால், சில பிரச்சனைகளால் இப்படம் பாதியில் தடைபட்டுள்ளது. இதையடுத்து இப்படத்தை பாதியில் விட்டுவிட்டு தெலுங்கில் ஒரு படத்தை இயக்க சென்றுவிட்டார் சங்கர்.

Kiara Advani
Kiara Advani

இதில் நடிகர் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. முதன்முறையாக இப்படத்தில் இசையமைப்பாளர் தமனுடன் கைகோர்த்துள்ளார் சங்கர்.

இதையும் படிங்க: கெட்டப்பேரு வாங்கிக்கட்டும் பீஸ்ட் நடிகை – தளபதி மானத்தை வாங்கிடாதம்மா!

இதில் நாயகியாக நடிக்க பலருடன் பேசப்பட்டுவந்த நிலையில் கடைசியாக ஹிந்தி நடிகை கியாரா அத்வானியை புக் செய்தனர். இதில் நாயகியாக நடிப்பதற்கு அவருக்கு சம்பளமாக ரூ.5 கோடி கொடுக்க முன்வந்துள்ளதாம் தயாரிப்பு தரப்பு. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

adminram

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment