Connect with us

இந்த ஹிந்தி பிரச்சனை எப்போதான் தீருமோ.?! ஏ.ஆர்.ரகுமான் முதல் – ‘நான் ஈ’ சுதீப் வரையில் லிஸ்ட் இதோ..,

Cinema News

இந்த ஹிந்தி பிரச்சனை எப்போதான் தீருமோ.?! ஏ.ஆர்.ரகுமான் முதல் – ‘நான் ஈ’ சுதீப் வரையில் லிஸ்ட் இதோ..,

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்தியாவிற்கென தனித்துவமாக ஏதேனும் பொது மொழி நிறுவியது கிடையாது. அந்தந்த மாநிலத்தில் உள்ள பிரதான மொழியே அந்தந்த மாநிலத்திற்கு உரிய மொழியாக உள்ளது. ஏனென்றால், இந்தியா ஒரு கூட்டாட்சி தத்துவம் கொண்ட நாடு.ஆனால், இதனை சிலர் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். அது ஏனோ தெரியவில்லை. சில சமயம் அந்த பிரச்சனை பூகம்பகமாக வெடித்து விடுகிறது.

இந்தியாவில் இந்தி பேசும் மக்கள் அதிகம். அதனால், சில வட மாநிலத்து பிரபலங்கள் சில சமயம் ஹிந்தி தான் தேசிய மொழி என்று தெரியாமல் கூறுவதுண்டு. அது தென் இந்தியாவில் பிரச்சினைகளை உண்டு பண்ணுவதும் உண்டு.

அதற்கு, அவ்வபோது தென் இந்தியாவிலிருந்து பதிலடி கொடுக்கப்பட்டு தான் வருகிறது. அப்படி குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இதனை பலமுறை செய்துள்ளார். ஒருமுறை பாலிவுட் விருது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும்போது இந்தி படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது, அவரை இந்தியில் அடைத்து விட்டனர் அவரும் மேடையேறி வந்தார். வந்தவர், சிறந்த நடிகருக்கான விருது என்று தமிழில் உச்சரித்து விட்டார். இதனை கண்டு அப்போது பாலிவுட் திரையுலகம் மிரண்டு விட்டது.

அதற்கு அடுத்ததாக அவர் தயாரித்து இருந்த “99 சாங்ஸ்” எனும் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது திடீரென தொகுப்பாளர் ஹிந்தியில் பேசியபோது சட்டென்று விலகி மேடையிலிருந்து கீழே இறங்கி, இந்தி என ஒதுங்கிவிட்டார்.

அதேபோல், கடந்த ஆண்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் மெட்ரோ நாயகன் சரீஸ் இருவரும் “ஹிந்தி தெரியாது போடா நான் தமிழ் பேசும் இந்தியன்” எனும் டீசர்ட் அணிந்து அதனை இணையதளத்தில் பதிவேற்ற, அந்த டீசர்ட் விற்பனை திடீரென்று அமோகமாக வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நேற்று பாலிவுட் ஹீரோ அஜய் தேவ்கன் மற்றும் கன்னட சினிமா ஹீரோ கிச்சா சுதீப் ஆகியோர் இடையே இந்த ஹிந்தி பிரச்சனை கருத்து மோதல் ட்விட்டர் மூலம் வெடித்தது.

கிச்சா சுதீப் இந்திய திரைப்படங்கள் வெளி வந்த பிறகு இனி இந்தி தேசிய மொழி என்று யாரும் சொல்ல முடியாது என்பதுபோல கருத்து தெரிவிக்க, உடனே அஜய் தேவ்கன் ஹிந்தி தேசிய மொழி பிறகு ஏன் இந்தியில் டப் செய்து உங்கள் படங்களை வெளியிடுகிறார்கள் என்று இந்தியில் கேட்டுவிட்டார்.

இதையும் படியுங்களேன் – என்னிடம் இருந்து முருகதாஸ் அஜித் பட வாய்ப்பை பறித்துவிட்டார்.! புலம்பும் பிரமாண்ட இயக்குனர்.!

அதற்கு பதிலளித்த கிச்சா சுதீப், நீங்கள் கூறியது இந்தியில் இருந்தது அதனை நான் புரிந்து கொண்டேன் அதற்கு பதிலாக நானும் கன்னடத்தில் பதிவு செய்தால் உங்களுக்கு அது புரியுமா .இந்தியாவுக்கு என்று பொது மொழி எதுவும் கிடையாது. நாம் அனைவரும் இந்தியர் நாங்களும் இந்தியர்கள் தான் என்று பதிவிட்டு அவருக்கு பதிலடி கொடுத்து விட்டார்.

இப்படி தொடர்ந்து ஹிந்தி பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தியாவுக்கு என்று பொதுவான மொழி எதுவும் கிடையாது என்பதை இவர்களைப் போன்ற ஆண்களுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை. இந்தியா என்பது அனைத்து மொழி பேசும் மக்களும் ஒன்றாக இணைந்து வாழும் நாடு. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top