Cinema History
ஆசையாக கேட்ட கிங்காங்… அட இதுக்கென்ன கேள்வி? அசால்ட்டு காட்டிய ஷாருக்கான்!
தமிழ் சினிமா மட்டுமல்லாது உலக சினிமா ரசிகர்களுக்கு பிடித்த நாயர்களின் பட்டியலில் கண்டிப்பாக ஷாருக்கானுக்கு இடம் இருக்கும். அப்படி ஒரு கூட்டத்தினை தன் பின்னே வைத்திருப்பவர் பணத்தால் மட்டுமே பெரிய இடமாக இருக்கிறாராம். அவர் குணம் அப்படி எளிமையாக இருக்குமாம்.
இந்தியில் பல ஹிட் படங்களை கொடுத்த ஷாருக்கான் தமிழிலும் ஒரு சில படங்களில் தலைக்காட்டி இருக்கிறார். தூர்தர்ஷன் தொடரான ஃபௌஜியில் ராணுவ வீரராக சினிமா நடிப்பினை தொடங்கினார். அதில் அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்க தொடர்ச்சியாக சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. தீவானா என்ற படத்தில் துணை நடிகராக நடித்தார். பாசிகர் மற்றும் டார் படங்களில் கான் வில்லன் வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: நான் எழுதின பாட்ட கண்ணதாசன்னு நினைச்சார் எம்.ஜி.ஆர்!. வாலி சொன்ன சீக்ரெட்!..
சமீபகாலமாக அவரின் படங்கள் சரியான வெற்றியை பெறாததால் ஒரு இடைவேளை எடுத்து கொண்டார். இதையடுத்து அவர் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இது ₹10 பில்லியனுக்கும் அதிகமாக வசூல் செய்து அதிக வசூல் திரைப்படம் என்ற அங்கீகாரத்தினை பெற்றது.
சிறந்த நடிகருக்கான எட்டு ஃபிலிம்பேர் விருதுகளுடன், அந்த பிரிவில் அதிக வெற்றிகளைப் பெற்ற சாதனையை திலீப் குமாரை சமன் செய்து இருக்கிறார். தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தினை நடித்து முடித்து இருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த பையனை போல ஸ்மார்ட்டாக கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: நான்தான் உன்னை ஜெயிக்க வச்சேன்!… எனக்கே ஸ்கெட்ச் போடுறியா?… லோகேஷை லாக் செய்த கமல்..
இந்நிலையில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. அந்த படத்தில் அதிகப்படியான தென்னிந்திய நடிகர்களே நடித்திருந்தனர். அப்போது கிங்காங் ஷாருக்கானை சுற்றி சுற்றி வந்து இருக்கிறார். அவரை அழைத்த ஷாருக் என்ன வேண்டும் எனக் கேட்டாராம். ஒரு முத்தம் கொடுத்துக்கவா என கிங்காங் ஆசையாக கேட்டாராம்.
உடனே கன்னத்தினை ஷாருக் காட்டியதை விட அந்த முத்தத்தினை வாங்கி கொண்டு துடைக்காமல் தன்னுடைய காட்சிக்கு சென்று விட்டாராம். அதை அதிகமுறை கிங்காங் தன்னுடைய பேட்டியிலேயே தெரிவித்து இருக்கிறார்.