விஜய்யுடன் நடிச்சு ஃபீல்ட் அவுட்டான ஹீரோயின்கள்.. வனிதா விஜயகுமார் யாருடன் பார்ட்டி பண்றாங்க பாருங்க!

#image_title
விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் வனிதா விஜயகுமார். அந்த படத்திற்கு பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த அவர், ஒரு கட்டத்துக்கு மேல் சினிமாவில் இருந்து திருமண பிரச்சனை காரணமாக காணாமல் போனார். ஒன்றுக்கு இரண்டு திருமணங்கள் செய்ய விஜயகுமாருக்கும் மகளுக்குமே பிரச்சனை வந்து குடும்பத்தில் இருந்தே நாட்டாமை ஒதுக்கி வைத்து விட்டார்.

ஒவ்வொரு சுப நிகழ்ச்சிகளுக்கும் ப்ரீத்தி விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார், அருண்விஜய் உள்ளிட்டோர் குடும்பத்துடன் ஒன்றாக இருக்க, வனிதா விஜயகுமார் மட்டுமே பாவம் சோகத்தில் ஒதுங்கி இருக்கும் சூழல் உருவாகி விட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் சின்ன ரோல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க ராபர்ட் மாஸ்டருடன் ஜோடி போட்டு ஒரு படத்தில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரெஸ் படத்தை தொடர்ந்து புரமோட் செய்தும் வருகிறார் வனிதா விஜயகுமார். சமீபத்தில், தனது 3வது திருமணம் குறித்தும் அதை தான் தவிர்த்து இருக்க வேண்டும் என்றும் பேசியிருந்தார்.

அஜித்துடன் வில்லன் படத்தில் ஜோடியாக நடித்த கிரண் விஜய்யுடன் திருமலை படத்தில் ஜக்கம்மா பாடலுக்கு மட்டும் கவர்ச்சி டான்ஸ் போட்டிருந்தார். பிரசாந்தின் வின்னர் படத்துக்குப் பிறகு இவர் நடித்த படங்கள் சரியாக போகாத நிலையில், விஷாலின் ஆம்பள படத்தில் ஆன்ட்டி ரோலில் நடிக்கும் நிலைமைக்கு சென்றார்.

சமீப காலமாக கில்மா ஆப் மூலம் சம்பாதித்து வரும் கிரணை வனிதா விஜயகுமார் சந்தித்து பிரெண்ட்ஸ் என பதிவிட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் என்னம்மா அங்க நடக்குது என கலாய்த்து வருகின்றனர்.