டைட்டான உடையில் ஒரு டைப்பாக போஸ் கொடுத்த கிரண்... இது எங்க போய் முடியுமோ!...

by சிவா |
kiran rathot
X

kiran rathot

பாலிவுட்டிலிருந்து பல நடிகைகள் தமிழ் திரையுலகுக்கு வந்தாலும் எல்லோரும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பதில்லை. சிலர் மட்டுமே நீண்ட நாள் தாக்கு பிடிக்கின்றனர். ஜோதிகா, சிம்ரன், நக்மா என பலரும் அப்படி வந்தவர்கள்தான். அதில் நடிகை கிரணும் ஒருவர். ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அவர் நடித்து தமிழில் அறிமுகமானார்.

அப்படத்தில் ஒரு மார்வாடி பெண்ணாக நடித்து அசத்தினார் கிரண். அந்த வேடத்திற்கு அவர் பொருத்தமாக இருந்தார். சரண் இயக்கிய அப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’பாடல் வைரல் ஹிட். எனவே, படமும் ஹிட் ஆனது. முதல் படமே வெற்றியை பெற அவரை தேடி வாய்ப்புகள் வந்தது.

kiran

அதன்பின் கமல்ஹாசன் – மாதவன் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், வில்லன், பரசுராம், திவான், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான். அதன்பின் கதாநாயகி வாய்ப்புகள் வரவில்லை. எனவே விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார்.

kiran

தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டுகொண்டு செக்ஸியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

kiran

இந்நிலையில், டைட்டான உடையில் பட்டன கழட்டி விட்டு போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

kiran

Next Story