இந்தம்மாவை யாராவது கண்ட்ரோல் பண்ணுங்கப்பா!...உச்சக்கட்ட கவர்ச்சியில் கிரண்....
பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காத ஹிந்தி பேசும் வட நாட்டு நடிகைகள் தமிழ் சினிமா பக்கம் வருவார்கள். சில சமயம் நம்ம இயக்குனர்கள் கதைக்கு தேவைப்படுவது என்பதால் அங்கு சென்றும் பாலிவுட் நடிகைகளை அழைத்து வருவார்கள். தமிழ் சினிமாவுக்கு அப்படி வந்தவரில் ஒருவர்தான் கிரண் ரத்தோர்.
முதல் படமே பாரம்பரிய சினிமா நிறுவனமான ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இப்படத்தை சரண் இயக்கியிருந்தார்.
அதன்பின் ‘அன்பே சிவம்’உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்புகள் குறையவே, விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. சகுனி, ஆம்பள உள்ளிட்ட சில படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்தார்.
தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அதிலும் சில சமயம் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
இந்நிலையில், பிகினி உடையில் பீச்சில் நிற்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இந்தம்மாவை யாராவது கண்ட்ரோல் பண்ணுங்கப்பா’ என பதிவிட்டு வருகின்றனர்.