என்ன அழகுடா... அஜித்தின் அழகை வர்ணித்த அந்த கிளாமர் நடிகை!

by adminram |
ajith
X

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட நடிகர் அஜித். இவர் ரசிகர்களால் செல்லமாக தல அழைக்கப்படுகிறார். தற்போது இவர் நடிப்பில் வலிமை படம் தயாராகி வருகின்றது.இப்படம் பொங்கல் ரிலீசாக ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.

இன்று குண்டாக, நரைத்த முடியுடன் நடித்துவரும் தல அஜித் பட்டு ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக திகழ்ந்தார். இவரது அழகை வர்ணிக்காத நடிகைகள் எவரும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு தனது வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்தவர்.

அஜித்துடன் 'கிரீடம்' படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை சரண்யா. இவர்கூட ஒரு பேட்டியில் அஜித்தை நான் ஆண் அழகன் என்றே கூறுவேன். அந்த அளவிற்கு மிக அழகான மனிதர் என குறிப்பிட்டிருந்தார்.

kiran

இந்நிலையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன் அஜித்துடன் நடித்த நடிகை ஒருவர் அவர் அழகை புகழ்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார். பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியானவர் நடிகை கிரண். இவர் விக்ரம் நடித்த ஜெமினி படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.

இப்படத்தின் வெற்றிக்குப்பின் அஜித் இரு வேடங்களில் நடித்த 'வில்லன்' நடத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். இந்தப்படமும் ஹிட் ஆனதை தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார்.

தற்போது 40 வயதாகும் இவர் பட வாய்ப்புகள் ஏதுமின்றி அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி விடியோவை பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் வில்லன் படத்தின் பாடல் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர், இந்த வீடியோவில் அஜித் எவ்வளவு ஹேண்ட்ஸம்மாக உள்ளார் என குறிப்பிட்டிருந்தார்.

kiran insta

இதை பார்த்த ரசிகர்கள், தல எப்போதுமே அழகுதான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Next Story