தரணி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் மீண்டும் ரசிகர்களை வரவழைத்து இருப்பதாக தியேட்டர் ஓனர்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
கில்லி படத்தில் விஜய் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து கடைசியாக நடனமாடும் அப்படி போடு பாடலுக்கு ஒட்டுமொத்த தியேட்டரும் எழுந்து நடனம் ஆடி வருகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தியேட்டர்களில் ஆட்டம் போடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: வெறித்தனமான வசூல் வேட்டை!.. 2 நாளில் லால் சலாம் லைஃப் டைம் காலி!.. கில்லி பாக்ஸ் ஆபிஸ் அப்டேட் இதோ!
வாழ்க்கை ஒரு வட்டம் என்பதுபோல கில்லி படம் ரீ ரிலீஸ் ஆனது குறித்து திரிஷா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருந்தார். கில்லி படத்தில் தொடங்கிய வெற்றிக் கூட்டணி விஜய்யுடன் திருப்பாச்சி, ஆதி, குருவி என வரிசையாக நடித்த திரிஷா பல ஆண்டுகள் கழித்து மீண்டும் லியோ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
ஆனால், அந்த படத்தில் அப்படி போடு போல ஒரு அசத்தலான குத்தாட்ட பாடல் இருவருக்கும் இல்லை. ஆனால், அதற்கு பதிலாக டீப் லிப் லாக் சீன் ஒன்றை லோகேஷ் கனகராஜ் வைத்திருந்தார்.
இதையும் படிங்க: ‘அலைபாயுதே’ படத்திற்கு பிறகு நயன்தாராவால் கிடைச்ச கிஃப்ட்! மாதவன் சொன்ன சீக்ரெட் என்ன தெரியுமா
இந்நிலையில், கில்லி படத்தில் முதலில் நான் தான் நடிக்க வேண்டியது என நடிகை கிரண் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர் என முன்னணி நடிகர்களுடன் நடித்த கிரண் விஜய்யுடன் திருமலை படத்தில் “வாடியம்மா ஜக்கம்மா” பாடலுக்கு மட்டும் நடனமாடியிருப்பார்.
கில்லி படத்தில் தன்னை நடிக்க அழைத்த நிலையில், தான் காதல் வலையில் விழுந்திருந்தேன். அதனால், எனக்கு தேவையில்லாமல் பல நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் மிஸ் ஆகி விட்டன என வருத்தத்துடன் கிரண் பேசியுள்ளார். அவரது பேட்டியை பார்த்த ரசிகர்கள் நல்லவேளை நீ நடிக்கலன்னு கழுவி ஊற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘அலைபாயுதே’ படத்திற்கு பிறகு நயன்தாராவால் கிடைச்ச கிஃப்ட்! மாதவன் சொன்ன சீக்ரெட் என்ன தெரியுமா
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…