More
Categories: Cinema News latest news

கில்லி படத்துல திரிஷா இல்லை நான்தான் நடிக்க வேண்டியது!.. தேவையில்லா சகவாசத்தால் மிஸ் பண்ணிட்டேன்!..

தரணி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் மீண்டும் ரசிகர்களை வரவழைத்து இருப்பதாக தியேட்டர் ஓனர்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

கில்லி படத்தில் விஜய் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து கடைசியாக நடனமாடும் அப்படி போடு பாடலுக்கு ஒட்டுமொத்த தியேட்டரும் எழுந்து நடனம் ஆடி வருகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தியேட்டர்களில் ஆட்டம் போடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertising
Advertising

இதையும் படிங்க: வெறித்தனமான வசூல் வேட்டை!.. 2 நாளில் லால் சலாம் லைஃப் டைம் காலி!.. கில்லி பாக்ஸ் ஆபிஸ் அப்டேட் இதோ!

வாழ்க்கை ஒரு வட்டம் என்பதுபோல கில்லி படம் ரீ ரிலீஸ் ஆனது குறித்து திரிஷா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருந்தார். கில்லி படத்தில் தொடங்கிய வெற்றிக் கூட்டணி விஜய்யுடன் திருப்பாச்சி, ஆதி, குருவி என வரிசையாக நடித்த திரிஷா பல ஆண்டுகள் கழித்து மீண்டும் லியோ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

ஆனால், அந்த படத்தில் அப்படி போடு போல ஒரு அசத்தலான குத்தாட்ட பாடல் இருவருக்கும் இல்லை. ஆனால், அதற்கு பதிலாக டீப் லிப் லாக் சீன் ஒன்றை லோகேஷ் கனகராஜ் வைத்திருந்தார்.

இதையும் படிங்க: ‘அலைபாயுதே’ படத்திற்கு பிறகு நயன்தாராவால் கிடைச்ச கிஃப்ட்! மாதவன் சொன்ன சீக்ரெட் என்ன தெரியுமா

இந்நிலையில், கில்லி படத்தில் முதலில் நான் தான் நடிக்க வேண்டியது என நடிகை கிரண் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர் என முன்னணி நடிகர்களுடன் நடித்த கிரண் விஜய்யுடன் திருமலை படத்தில் “வாடியம்மா ஜக்கம்மா” பாடலுக்கு மட்டும் நடனமாடியிருப்பார்.

கில்லி படத்தில் தன்னை நடிக்க அழைத்த நிலையில், தான் காதல் வலையில் விழுந்திருந்தேன். அதனால், எனக்கு தேவையில்லாமல் பல நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் மிஸ் ஆகி விட்டன என வருத்தத்துடன் கிரண் பேசியுள்ளார்.  அவரது பேட்டியை பார்த்த ரசிகர்கள் நல்லவேளை நீ நடிக்கலன்னு கழுவி ஊற்றி வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘அலைபாயுதே’ படத்திற்கு பிறகு நயன்தாராவால் கிடைச்ச கிஃப்ட்! மாதவன் சொன்ன சீக்ரெட் என்ன தெரியுமா

Published by
Saranya M

Recent Posts