வாலிப மனசை உசுப்பேத்தும் சூா்யா பட நாயகி!

Published on: May 3, 2022
kirthi shetty
---Advertisement---

கீா்த்தி ஷெட்டி தெலுங்கு சினிமா கண்டெடுத்த அழகிய பதுமை. இவர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பண்ணா திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையானார். பால் வடியும் முகம் பவ்யமான அடக்கம், நல்ல நடிக்கும் திறமை மிகுந்த நடிகையான இவா் அனைத்து தரப்பு ரசிகபெருமக்களையும் தன் வசம் படுத்தி கொண்டாா்.

kirthi shetty

உப்பண்ணா திரைப்படத்தின் மூலம் கீர்த்தி ஷெட்டியின் மீது ஒட்டுமொத்த இளைஞர்களின் கவனமும் பாய்ந்தது. அதன் பிறகு அவரை சமூகவலைத்தளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது. அவரது கியூட்னஸ் எல்லோரையும் வசீகரித்தது. செக்க சிவந்த உதடு, கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் என பன்முக திறமை கொண்டவர்.

kirthi shetty

சினி உலகை பொருத்தவரை நடிகையோ நடிகரோ யாராக இருந்தாலும் தங்களுக்கென ஒரு அடையாளமோ அங்கீகாரமோ கிடைப்பதற்காக கடுமையாக போராடி வருகிறார்கள். சிலருக்கு அதற்கான பலன் மிகவும் தாமதமாக கிடைக்கும். சிலருக்கு உடனே கிடைத்துவிடும். அப்படி தான் ஒரு இளம் நடிகைக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

அதன்படி கீர்த்தி ஷெட்டி தற்போது தெலுங்கு இயக்குனர் விரிஞ்சி வர்மா அடுத்ததாக இயக்கவுள்ள புதிய படத்தில் சோலோ ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 18 வயது இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி இவ்வளவு குறுகிய காலத்திலேயே சோலோ ஹீரோயினாக நடிக்க இருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

kirthi shetty

சமூகவலைத்தளங்களில் அழகழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கும் கீர்த்தி ஷெட்டி. தற்போது கோல்ட் கலா் டிரெஸ்ஸில் ஸ்வீல்ஸ் லுக்கில் தனது இன்டாவில் பதிவிட்ட புகைப்படட“ நெட்டிசன்களின் கவனத்தை தன் பக்கம் ஈா்த்துள்ளது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment