ஒன்றரை கோடி சம்பளம் கேட்கும் 18 வயது இளம் நடிகை....!
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளாக வலம் வரும் நயன்தாரா சமந்தா போன்ற நாயகிகளே பல ஆண்டுகளுக்கு பின்னர் தான் கோடிகளில் சம்பளம் வாங்க தொடங்கினார்கள். இப்படி உள்ள நிலையில் வெறும் 18 வயதே நிறைந்த இளம் நடிகை ஒருவர் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம்.
ஆமாங்க தெலுங்கில் வெளியான உப்பெண்ணா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் அறிமுகமான முதல் படமே சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றதோடு, அம்மணிக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
பார்த்ததும் பிடித்து விடும் அளவிற்கு கொள்ளை அழகில் ஜொலிக்கும் கீர்த்தி ஷெட்டியை ரசிகர்கள் கொண்டாட தொடங்கினார்கள். அதன் காரணமாக அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமான கீர்த்தி ஷெட்டி உப்பெண்ணா படத்தை தொடர்ந்து ஷ்யாம் சிங்காராய், பங்கர் ராஜூ ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் தி வாரியர் மற்றும் சூர்யா பாலா கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ஆகிய படங்களில் கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி ஷெட்டி சம்பளமாக ஒரு படத்திற்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கேட்கிறாராம். அதன்படி அவர் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்ட நிலையில், பாலா சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு வெறும் 75 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.