Cinema News
“படம் இன்னைக்கு ரிலீஸ்”… ஆனால் படம் இன்னும் ரெடி ஆகல.. பாரதிராஜா பண்ண வேலை என்ன தெரியுமா??
பாரதிராஜா என்ற பெயரை கேட்டாலே அவர் இயக்கிய கிராமத்து திரைப்படங்கள்தான் நமக்கு நினைவில் வரும். “டிக் டிக் டிக்”, “சிகப்பு ரோஜாக்கள்”, “நிழல்கள்” போன்ற பல வெரைட்டியான படைப்புகளை பாரதிராஜா கொடுத்திருந்தாலும் அவரது கிராமத்து திரைப்படங்கள் அவரை டிரெண்ட் செட்டர் என்ற நிலைக்கு உயர்த்தியது.
பாரதிராஜா இயக்கிய “16 வயதினிலே”, “கிழக்கே போகும் ரயில்”, “மண் வாசனை”, “புது நெல்லு புது நாத்து”, “வேதம் புதிது”, “முதல் மரியாதை”, “கிழக்குச் சீமையிலே”, “கருத்தம்மா” போன்ற திரைப்படங்கள் காலத்துக்கும் பேசப்படும் திரைப்படங்களாக அமைந்தன. இந்த நிலையில் பாரதிராஜா இயக்கிய “கிழக்கு சீமையிலே” திரைப்படத்தின் வெளியீட்டின்போது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்.
1993 ஆம் ஆண்டு விஜயகுமார், ராதிகா, நெப்போலியன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “கிழக்கு சீமையிலே”. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற பல கிராமிய பாடல்கள் இப்போதும் மிக பிரபலமான பாடல்களாக இருக்கிறது. “ஆத்தங்கரை மரமே”, “எதுக்கு பொண்டாட்டி”, “தென்கிழக்கு சீமையிலே” போன்ற பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் பாடல்களாக திகழ்ந்து வருகிறது.
குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “மானூத்து மந்தையில” என்ற பாடல் தமிழ்நாட்டு கிராமங்களில் பல வீட்டு வீஷேசங்களிலும் ஒலித்து வரும் பாடலாக மக்களோடு மக்களாக ஒன்றாக கலந்திருக்கிறது.
“கிழக்குச் சீமையிலே” திரைப்படம் தமிழ் சினிமாவில் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் முக்கிய வெற்றி பெற்ற திரைப்படமாகும். பாரதிராஜா திரைப்படங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க திரைப்படமாகவும் இது அமைந்துள்ளது.
இதையும் படிங்க: “வாரிசு” படத்துக்கு இவ்வளவு திரையரங்குகள்தான் ஒதுக்கப்பட்டுள்ளதா??… செம காண்டில் இருக்கும் ரசிகர்கள்…
இந்த நிலையில் “கிழக்குச் சீமையிலே” திரைப்படம் குறித்தான ஒரு சுவாரசிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அத்திரைப்படம் முழுமையாக முடிவடையவில்லையாம். தீபாவளி அன்று காலை 8 மணி வரை பிரசாத் லேப்பில் அத்திரைப்படத்திற்கான மிக்ஸிங் நடந்துகொண்டிருந்ததாம். மிக்ஸிங் முடிந்த பிறகுதான் ஒவ்வொரு ரீல் ஆக பிரதி எடுக்கப்பட்டு அந்த படம் பல திரையரங்குகளில் வெளியானதாம்.