அங்காடி தெரு முதல் ஏகன் வரை... சூப்பர்ஹிட் படங்களை மிஸ் செய்த கனா காணும் காலங்கள் நடிகர்!

kkk
Kana Kanum Kalangal: விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக வலம் வரும் கனா காணும் காலங்கள் சீரியலின் முதல் சீசன் நடிகரான இர்பான் தான் மிஸ் செய்த படங்கள் குறித்து சொல்லி இருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பெரும்பாலும் சில சீரியல்கள் தான் எல்லா தரப்பு ரசிகர்களிடமும் பெரிய அளவில் வரவேற்பை பெறும். அதுபோல ஒரு சீரியலாக இத்தனை ஆண்டுக்காலமும் வரவேற்பை பெற்றது தான் கனா காணும் காலங்கள். பல சீசன்கள் வந்துவிட்டது.
இருந்தும் முதல் சீசனில் இருந்த வரவேற்பு இன்றும் தொடர்ந்து வருகிறது. பாலா, வினீத், பச்சை, ராகவி, சங்கவி, ஜோ, பாண்டி என பலரின் கேரக்டர் பெயர்களே அவர்களின் நிஜ பெயராக இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இதில் பலரும் பெரிய அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பலரும் ஒரு சில படங்களில் தலை காட்டி விட்டு நடிப்பில் இருந்து விலகிவிட்டனர். அப்படி ஒரு ஹீரோவாக இருப்பவர் தான் இர்பான். இவர் கனா காணும் காலங்களை தாண்டி சரவணன் மீனாட்சியில் ஹீரோவாக நடித்து வந்தார். ஆனால் அதிலும் பாதியிலேயே வெளியேறினார்.
தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து ஓடிடியில் வெளியான கனா காணும் காலங்கள் சீரியலின் வாத்தியாராக வந்தார். இந்நிலையில் இர்பான் தன்னுடைய பேட்டி ஒன்றில் நான் முக்கிய நான்கு படங்களை மிஸ் செய்துவிட்டேன். அதை செய்து இருந்தால் என்னுடைய கேரியரே வேறு மாதிரி இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், அங்காடி தெருவில் நான் ஒப்பந்தமாகி உடல் இளைச்சு முகம் கருத்து ரெடியாகி விட்டேன். ஆனால் அப்போது ஹீரோ மகேஷ் குடும்பம் திடீரென ஒப்புக்கொள்ள அவருக்கு அந்த வாய்ப்பு போனதால் அதே வேளையில் வந்த ஏகன் பட வாய்ப்பும் மிஸ்ஸானது.
ஏகன் படத்தில் அஜித் சாரின் தம்பி கேரக்டருக்கு கேட்ட போது அங்காடி தெருவில் கமிட்டாகி விட்டதால் மறுத்துவிட்டேன். நவ்தீப் அந்த கேரக்டரை செய்தார். சரோஜா படமும் மிஸ்ஸாகி விட்டது. இதுபோல மூன்று, நான்கு படங்கள் நடக்கவில்லை. நடந்து இருந்தால் என் கேரியர் மாறி இருக்கும் என்றார்.