Connect with us
sathyaraj

Cinema News

ஆத்தாடி..சத்தியராஜுக்கு இத்தனை கோடி சம்பளமா?…கசிந்த தகவல்…

திரையுலகில் யெஸ் பாஸ் எனக்கூறும் அடியாட்களில் ஒருவராக பல திரைப்படங்களில் நடித்து பின் வில்லனாக பல படங்களில் நடித்தவர் சத்தியராஜ்.

இயக்குனர் மணிவண்ணன் இவரை அசத்தலான வேடங்களில் நடிக்க வைத்து ரசிகர்களிடம் நெருக்கமாக்கினார். கடலோர கவிதைகள் திரைப்படம் மூலம் பாரதிராஜா இவரை ஹீரோவாக மாற்றினார். அதன்பின் வில்லன், ஹீரோ என மாறி மாறி நடித்து வந்த சத்தியராஜ் ஒருகட்டத்தில் கதாநாயகனாக மட்டுமே நடிக்க துவங்கினார்.

sathyaraj

sathyaraj

தற்போது குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். பாகுபலி, பிரின்ஸ், லவ் டுடே என பல வெற்றிப்படங்களில் இவர் இருப்பார். அதிலும் பாகுபலி திரைப்படத்தில் இவர் ஏற்ற கட்டப்பா வேடம் பேன் இண்டியா அளவுக்கு இவரை பிரபலமாக்கியது.

இந்நிலையில், இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.2 கோடியை சம்பளமாக வாங்குவது தெரியவந்துள்ளது. அதேபோல், சம்பள விஷயத்தில் சத்தியராஜ் செம கறார். ஒரு சம்பளம் பேசி நடிக்க துவங்கிவிட்டால் எக்காரணம் கொண்டும் அதை குறைக்க முன் வர மாட்டார். இன்னும் சொல்லப்போனால், சில திரைப்படங்களில் முழு சம்பளத்தையும் முன்பே வாங்கிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top