நடிகரா மட்டும்தான் பாத்திருப்பீங்க!....இவர் யார்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க!....

by சிவா |   ( Updated:2022-03-19 07:15:53  )
raja
X

தமிழ் சினிமா வரலாற்றில் பலருக்கும் இயக்குனர், நடிகர் என பல அடையாளங்கள் இருக்கும். சிலருக்கோ அடையாளம் மாறி மாறிப்போகும். சிலரை நடிகராக மட்டுமே ரசிகர்கள் பார்ப்பார்கள். கேமராவுக்கு முன்பு அவர்கள் அப்படித்தான் அறிமுகமாகியிருப்பார்கள். ஆனால், அவர்களின் கதைகளை தெரிந்தால் ஆச்சர்யமாக இருக்கும்.

திரையுலகில் வெற்றியை கொடுத்த பலரையும் சினிமா கொண்டாடமலே போயிருக்கிறது. தொடர்ச்சியாக ஹிட் கொடுப்பவர்களை மட்டுமே கணக்கில் கொள்வார்கள். இதன் காரணமாக சில வெற்றிகளை கொடுத்த பின்பும் வேறு துறைக்கு அவர்கள் மாறிவிடுவார்கள்.

raja

சரி விஷயத்துக்கு வருவோம். திரைப்படங்களிலும், சீரியல்களில் நமக்கு தெரிந்த நடிகராக இருப்பவர் ராஜா. இவரின் கதை தெரிந்தால் ஆச்சர்யமாக இருக்கும். விக்ரம், தர்மதுரை என கமல், ரஜினியை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராஜசேகரின் உதவியாளர்தான் இந்த ராஜா.

sankar guru

ஜெமினி நிறுவனம் தயாரிப்பில் அர்ஜூன், சரத்பாபு, சீதா உள்ளிட்ட பலரும் நடித்து 1982ம் ஆண்டு வெளியான சங்கர் குரு படத்தை இயக்கியவர்தான் இந்த ராஜா. இப்படத்தில் அஜித்தின் மனைவி ஷாலினி சிறுமியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 100 நாட்களை தாண்டி ஓடியது. இப்படத்திற்கு பின் தாய்மேல் ஆணை, வேட்டையாடு விளையாடு(1989), சொந்தக்காரன், துருவ நட்சத்திரம்(1993), தூள் பறக்குது உள்ளிட்ட 9 திரைப்படங்களை ராஜா இயக்கினார். இதில் 5 படங்களில் அர்ஜூன் ஹீரோவாக நடித்தார். அதன்பின் ராஜா படங்களை இயக்கவில்லை. தெலுங்கில் 2 சீரியல்களை இயக்கினார்.

easwari rao

மேலும், பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஈஸ்வரி ராவை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர் காலா படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்தவர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.

சீரியல் நடிகர் மற்றும் இயக்குனர் திருமுருகன் ராஜாவை தனது ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் நடிகராக நடிக்க வைத்தார். அதன்பின், சமுத்திரக்கனி தான் இயக்கிய நாடோடிகள் படத்தில் சசிக்குமாருக்கு அப்பாவாக நடிக்க வைத்தார். அதன்பின் ராஜா முழுநேர நடிகராக மாறிவிட்டார். ஒருபக்கம் சீரியலில் இவர் நடித்து வருகிறார்.

raja

தாமரை, கங்கா, நெஞ்சம் மறப்பதில்லை, கண்மணி, ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது சுந்தரி, தென்றல் வந்து என்னை தொடும் ஆகிய சீரியல்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் பலரின் அடையாளங்கள் இப்படி மாறியிருக்கிறது!....

Next Story