கேஜிஎப்-2 தமிழ் வசனகர்த்தா யார் தெரியுமா?... கேட்டா ஷாக் ஆவிங்க.....

by சிவா |
kgf
X

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப். இப்படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கியிருந்தார். அதிரடி ஆக்‌ஷன் படமாக வெளிவந்த இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

kgf

தற்போது அப்படத்தின் தொடர்ச்சியாக கே.ஜி.எஃப் – 2 திரைப்படம் கடந்த 14ம் தேதி வெளியானது. விஜயின் பீஸ்ட் படம் வெளியான நிலையில், இப்படமும் போட்டிக்கு வெளியாகியுள்ளது. பீஸ்ட் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற கே.ஜி.எஃப்-2 படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

kgf

இப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் மற்றும் திரைக்கதை ஆகியவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இப்படத்தின் வசனங்கள் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது.

ashok

இந்நிலையில், இப்படத்தில் தமிழில் வசனம் எழுதியவர் யார் என்கிற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. இவர் பெயர் அசோக். இவர் விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துல விஜய் சேதுபதியின் உறவினராக நடித்திருப்பார்.

ashok

அவருக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாத நிலையில், ஆனால் அதையெல்லாம் மறந்து போன விஜய் சேதுபதி ‘அண்ணே நாகராஜண்ணே’ என கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக்கொள்வார். பின்னர் அவருக்கு நினைவு திரும்பியதும் ‘இவனெல்லாம் எதுக்கு என் கல்யாணத்துக்கு வந்தான்?’ என நண்பர்களிடம் கூறுவார். அந்த அசோக்தான் கேஜிஎப் படத்தின் அசத்தல் தமிழ் வசனங்களை எழுதி பாராட்டை பெற்றுள்ளார்.

Next Story