ஆசைப்பட்டதையே வாழ்க்கையாக மாற்றிக்கொண்ட இர்பான்… சோதனையை கடந்து சாதனை செய்த இளைஞர்

by சிவா |
irfan
X

அன்று இர்பான் விரும்பியதை சாப்பிட ஆசைப்பட்டார்; இன்று, இர்பான் சாப்பிட உலகமே ‘ஆசை’ப்படுகிறது’.

நினைத்ததை அடைந்தால் அது வெற்றி; கிடைத்ததை விரும்பினால் அது மகிழ்ச்சி. இலக்கை வெற்றிக்கொள்வதே இங்கு சாதனை. இங்கே யூடியூப்பர் இர்பான் வாழ்க்கையும் அப்படிதான் இருக்கிறது. சின்ன வயதில், விரும்பியதை சாப்பிடுவதை ஆசையாக கொண்ட அவருக்கு, சாப்பிடுவது மட்டுமே இப்போது வாழ்க்கையாக மாறி இருக்கிறது, வருமானத்தை அள்ளி அள்ளி தருகிறது. இப்படி, விரும்பிய வாழ்க்கை எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை.

irfan

irfan

சென்னை, சூளைமேட்டில் 1,200 ரூபாய் வாடகை தரும் நிலையில், ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்தான் இர்பான். அப்பா, ஆட்டோவுக்கு பாடி கட்டும் தொழிலாளி. இதில் கிடைத்த சொற்ப வருமானம்தான், குடும்பத்தின் வாழ்வாதாரம். சில மாதங்களில், வீட்டு வாடகை கூட தர முடியாத நெருக்கடியான நிலையில், அவரின் அம்மாவிடம் வீட்டு உரிமையாளர் வாடகை கேட்ட திட்டிய போதெல்லாம், சிறுவனாக இருந்த இர்பான் வீட்டுக்குள் சென்று கதறி அழுவாராம். சிறுவனாக இருந்த போது, மீன் சாப்பிடுவது என்றால் இர்பானுக்கு கொள்ளை ஆசை. குடும்பச்சூழலில் அந்த ஆசை கூட நிறைவேறவில்லை.

irfan

நண்பர்களும் ‘குண்டு, தடியன்’ என இர்பானை கிண்டலடித்ததால், பள்ளிச் சூழலும் இர்பானுக்கு வேதனையே தந்தது. நொந்துபோன இர்பான் கல்லூரியில் படித்தபோது, 16ஜிபி போன் ஒன்றை இஎம்ஐ-ல் வாங்கி இருக்கிறார். ஆனால், அதில் வீடியோக்களை பதிவிட அப்போது தெரியவில்லை. ஒரு கட்டத்தில், சொந்தமாக யூடியூப் ஆரம்பித்து தான் சாப்பிடும் வீடியோக்களை அதில் பதிவிடுகிறார். வேலை பார்க்கும் இடத்திலும் அவரை கிண்டலடிக்க, வேலையை விட்டுவிட்டு முழு நேரமும் தனது சாப்பிடும் வீடியோக்களை பதிவிட சப்கிரைப்பர்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

irfan

இதையடுத்து விதவிதமான உணவு வகைகளை ஊர் ஊராக தேடிச்சென்று ஓட்டல்களில் சாப்பிட்டு, அந்த வீடியோ பதிவுகளால் இர்பான் ஒரு கட்டத்தில் யூடியூப் செலிபரட்டியாக மாறினார்.
இப்போது 4 மில்லியன் சப்ஸ்கிரைப்பர் இர்பானை பின்தொடரும் நிலையில், மாதந்தோறும் பல லட்சக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. 1200 ரூபாய் வாடகை தர சிரமப்பட்ட இர்பான் குடும்பம், இன்று சகலவசதிகளை பெற்றிருக்கிறது. 27 வயதில், சொந்த வீடு கட்டி வருகிறார் இர்பான்.
சின்ன வயதில் சாப்பிட ஆசைப்பட்ட இர்பான், அந்த வறுமையால் நினைத்ததை சாப்பிட முடியவில்லை.

இன்று, அவரை ‘சாப்பிட வாங்க’ என அழைக்காத ஓட்டல் இல்லை என்னும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார். அவர் சாப்பிடுவதை பார்க்க பல லட்சக்கணக்கான மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

irfan

முயற்சி செய்தால் சமயத்திலே, முதுகு தாங்கும் இமயத்தையே… என்ற பாடலின் ஒரு வரி போல, சிறுவனாக சாப்பிட ஆசைப்பட்ட இர்பானுக்கு, வறுமையே பெரும் தடையாக இருந்தது.

இன்று, அவர் சாப்பிடுவது மட்டுமே அவரது வறுமையை உடைத்து தகர்க்கும் ஒரு பெரும் ஆயுதமாக மாறி இருக்கிறது.

Next Story