சிவாஜியின் பேரனை காணவில்லையா.?! பேரதிர்ச்சியில் கோடம்பாக்கம்.!
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது விக்ரம் பிரபு கும்கி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து அறிமுகமானவர். சிவாஜியின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு அதே போல அடுத்தடுத்து இவன் வேற மாதிரி, சிகரம் தொடு இதில் நடித்து வளர்ந்து வரும் முன்னணி நடிகராக காட்டிக் கொண்டார் விக்ரம் பிரபு.
ஆனால், அதன்பின்னர் அவர் தேர்ந்தெடுத்த கதைகள் சரியாக இல்லாத காரணத்தால் தோல்விகளை தழுவினார். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் தயாரித்த 'வானம் கொட்டட்டும்' எனும் திரைப்படம் ஓரளவு நல்ல லாபத்தைக் கொடுத்தது.
அதன் பின்னர், மீண்டும் தோல்வி படங்களை கொடுத்து விக்ரம் பிரபு எங்கே போனாலும் தேடும் அளவிற்கு பிசியாகிவிட்டார். இதற்கிடையில் கொம்பன் முத்தையா இயக்கத்தில் 'புலிக்குத்தி பாண்டி' எனும் திரைப்படத்தில் நடித்து முடித்தார். அந்த படம் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பானது.
தற்போது, அவர் நடிப்பில் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்து வருகிறார். இது போக அவர் நடிப்பில் ஏற்கனவே தயாராகி உள்ள 'டாணாக்காரன்' என்னும் திரைப்படம் ரிலீஸ்க்கு ரெடியாக உள்ளது. ஆனால், அந்த திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன்-
இவருக்கு இது ரெம்ப ஜாஸ்தி.! ரிஸ்க் எடுக்கும் மாநாடு டீம்.! |
தமிழ் திரையுலகில் சிவாஜியின் இடத்தை பிடிக்கா விட்டாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் இளைய திலகம் பிரபுவின் இடத்தையாவது விக்ரம் பிரபு தக்கவைப்பாரா என்பதை அடுத்தடுத்த அவர் தேர்வு செய்யும் திரைப்படங்களில் தான் தெரியும்.