Connect with us

திரைப்படங்களில் நாட்டுப்புறப்பாடல்களைப் பாடி நடித்து அசத்திய இருபெரும் பாட்டிகள்

Cinema History

திரைப்படங்களில் நாட்டுப்புறப்பாடல்களைப் பாடி நடித்து அசத்திய இருபெரும் பாட்டிகள்

நாட்டுப்புறப்பாடல்கள் என்றால் எப்போதுமே ரசனைக்குரியவை தான். கிராமத்து மண்வாசனையுடன் தனி மெட்டுடன் நம்மை ஆட்டம்போட வைக்கும். அதே நேரம் கருத்தாழம் மிக்கவையாகவும் இருக்கும். கல்வி பயிலாதவர்கள் கூட இந்தப் பாடல்களைக் கேட்டால் போதும். அவர்களுக்குத் தேவையான படிப்பறிவு கிடைத்து விடும். இதற்கு வித்திட்ட இரு கலைமாமணி மேதைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.

1985ல் பாண்டியராஜன் நடித்து இயக்கிய ஆண்பாவம் படத்தில் கொல்லங்குடி கருப்பாயி நடித்துள்ளார். நாட்டுப்புறப்பாடல் ஒன்றையும் பாடி அசத்தியுள்ளார். இந்தப்படத்தில் இவர் பாண்டியராஜனுக்குப் பாட்டியாக நடித்துள்ளார். இந்தப்படம் 200 நாள்கள் வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை மாவட்டத்தில் கொல்லங்குடி என்ற ஊரில் பிறந்தவர் தான் கருப்பாயி. படிப்பறிவு இல்லாத இவர் பலரது வாழ்க்கையைப் பாடலாகப் பாடியுள்ளார். 80வயதான போதும் இவரது பாடலுக்கு வயதோ துள்ளலான இளமை பொங்கும் 20 வயது தான்.

kollankudi karuppayi

இவரது பாட்டுக்கு குயில் கூவும். நெற்கதிர்களும் இசைப்பாடும். நடவுக்கு ஒரு பாட்டு, நாத்துக்கு ஒரு பாட்டு, களைக்கு ஒரு பாட்டு, கதிருக்கு ஒரு பாட்டு, சுள்ளிக்கு ஒரு பாட்டு, தண்ணிக்குடத்துக்கு ஒரு பாட்டு. எத்தனையோ பாட்டுகள் இன்றளவும் இவர் புகழைப்பாடும்.

இவரது முதல் பாடல் கொல்லங்குடி ஊரில் உள்ள காவல் தெய்வமான காளீஸ்வரர் கோவிலில் பாடிய கும்மிப்பாட்டு தான். இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார். தனது கணவர் இறந்ததும் சினிமாவுக்கு முழுக்கு போட்டார். தன் மகளின் இறப்பைத் தொடர்ந்து உடல் நலிவுற்ற நிலையில் ஓய்வு எடுக்கிறார்.

அடுத்து நாம் காண இருப்பது பரவை முனியம்மா. சிங்கம் போல வாராண்டி செல்லப்பேராண்டி. இவங்க பேரு முனியம்மா. 25.6.1937 நாளன்னு மதுரையில் பிறந்தார். சிறுவயது முதலே நாட்டுப்புற இசையில் அலாதி ஆர்வம். கோவில் திருவிழாக்களில் நிறைய பாடல்களைப் பாடியுள்ளார்.

16 வயதிலேயே வெள்ளைச்சாமி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவரது கணவரின் ஊர் மதுரையில் உள்ள பரவை. திருமணத்திற்கு அப்புறம் இவர் பரவைக்கே சென்று விட்டார். இவருக்கு 9 பிள்ளைகள். இவரது கடைசி மகனான செந்தில் மனவளர்ச்சி குன்றியவர்.

இவங்களோட மற்ற பிள்ளைகளுக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்துவிட்டார். செந்தில் மட்டும் இவர் கூடவே இருந்து இவரைப் பார்த்துக் கொண்டார். பரவை வந்தும் கோவில் திருவிழாக்களில் பாடல்களைப் பாடி அசத்தினார்.

இவரோட கம்பீரமான குரலுக்கு அடிமையாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. தொடர்ந்து திருச்சி, மதுரை வானொலி நிலையங்களில் பாடல்களைப் பாடி அசத்தினார். இதன் மூலம் இவருக்கு திரைத்துறையில் வாய்ப்பு கிட்டியது.

இயக்குனர் தரணி தான் 2003ல் வெளியான சீயான் விக்ரம் நடித்த தூள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்தப்படத்தில் தான் சிங்கம் போல நடந்து வாரான் செல்லப்பேராண்டி என்ற பாடலைப் பாடி உலகப்புகழ் பெற்றார். கடைசியாக இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான்கராத்தே படத்தில் தான் நடித்துள்ளார்.

maan karathe sivakarthikeyan, paravai muniyamma

83வயதான இவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்தார். திரையுலகில் சம்பாதித்ததை வைத்து தனது 3 மகள்களையும் கரை சேர்த்தார். 2014ல் தனது கணவர் வெள்ளைச்சாமியின் மறைவுக்குப் பிறகு உடல்நலம் குன்றி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். மருத்துவ சிகிச்சைகளிலேயே நகரும் வாழ்வில் எழுந்து நடக்கக்கூட முடியாத நிலையில் உள்ளார்.

சில காலம் தனியார் மருத்துவமனையில் வைத்திருந்த அவரது உறவினர்கள் போதிய பணமின்றி அவரை வீட்டிலேயே வைத்து வைத்தியம் செய்து வருகின்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிதித்திட்டத்தின் மூலம் மாதம் ரூ.6000 வந்தாலும் அந்த தொகை சிகிச்சைக்குப் போதவில்லை என்கின்றனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில் அவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லை.

கலைமாமணி விருது வாங்கிய மறுநாளே அவருக்கு ரொம்ப முடியாமப் போச்சு. கிட்னில ட்ரீட்மெண்ட் எடுத்தபோது கல் உறைஞ்சி இருந்தது. நுரையீரல்ல நீர் கோர்த்திருச்சு. எங்களால முடிஞ்ச அளவு வைத்தியம் பார்த்திருக்கோம். தனித்துவமான திறமைகளால் பல விருதுகளைப் பெற்று தான் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்த்த இந்தக் கலைஞர் சிகிச்சைக்காக அரசிடம் உதவி கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர் இவருக்கு உதவி செய்தார்கள். அந்த நிலையிலும் தனது கடைசி மகனுக்காக உதவி செய்யவே கோரினார் பரவை முனியம்மா. உடல்நிலையில் ஆரோக்கியமா இருக்கணும் என்பதற்காக சமையல் குறிப்புகளைத் தந்துள்ளார்.

இவர் சினிமாவில் நுழையும் போது வயது 60. சாதிக்க வயது தடையில்லை என்பதை ஆணி அடித்தாற்போல் அதிரடியாகச் சொல்லி நிரூபித்துள்ளார் இந்தப் பாட்டி பரவை முனியம்மா. இவர் 29.3.2020ல் காலமானார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top