முதல் படமே மாஸ் ஹிட்… ஆனாலும் ஜொலிக்க முடியாமல் போன தமிழ் நடிகர்கள்… இவர மறக்க முடியுமா?

actors
Actors: தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க நடிகர்கள் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டும். ஆனால் சில நடிகர்கள் நடித்த முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுத்து வாய்ப்புகள் குவியும் ஆனாலும் அவர்கள் தங்களுடைய இடத்தை தவற விட்டு சில காலத்திலேயே காணாமல் போய்விடுவார்கள். அப்படிப்பட்ட ஹீரோக்கள் குறித்த ஆச்சரிய தொகுப்புகள்.
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக இருந்தவர் அப்பாஸ். 1996 ஆம் ஆண்டு காதல் தேசம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் எண்ட்ரி கொடுத்தவர். முதல் படமே அவரை உச்சத்தில் கொண்டு வைத்தது. வாய்ப்புகளும் குவிந்தது.
நிறைய படங்களில் பிஸியாக நடித்து வந்த அப்பாஸ் தொடர்ச்சியாக அதை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் தவறவிட்டார். தற்போது வெளிநாட்டில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
காதலர் தினம் என்று மிகப்பெரிய வெற்றி படத்தில் நடித்தவர் குணால். சாதுவான முகத்துடன் இவர் நடிப்பில் வெளியான எல்லா படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கோலிவுட்டில் கொடிகட்டி பறப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
குழந்தை நட்சத்திரமாக அஞ்சலி திரைப்படத்தில் நடித்தவர் தருண். தொடர்ந்து மீரா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பின்னர் ஹீரோவாக அசத்தி வந்தார். தமிழில் புன்னகை தேசம் மற்றும் எனக்கு 20 உனக்கு 18 படங்களில் ஹீரோவாக நடித்தார். இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றி என்றாலும் அதன் பின்னர் தன்னை கோலிவுட்டில் காண முடியவில்லை.

யூனிவர்சிட்டி படம் மூலம் ஹீரோவாக அறிமுக ஆனவர் ஜீவன். தொடர்ந்து காக்க காக்க திரைப்படத்தில் வில்லனாக அவதாரம் எடுத்தார். படம் சூப்பர் ஹிட் அடிக்க அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்தது. திருட்டு பயலே, நான் அவன் இல்லை என ஆன்ட்டி ஹீரோ ரோல்களில் நடித்து அசத்தினார்.
தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்தாலும் திடீரென ஜீவன் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மகனான ரவி கிருஷ்ணா 2004 ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்தாலும் அதன் பின்னர் அவருக்கு வெற்றிப் படம் எதுவும் அமையவில்லை. நடிப்பிலிருந்து பிரேக் எடுத்தவர் தற்போது 7 ரெயின்போ காலனி இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.