அன்னபூரணியை தொடர்ந்து சர்ச்சையை கிளப்பிய அனிமல்!.. இதுல இருந்து ஒண்ணு மட்டும் நல்லா தெரியுது!..

சமீப காலமாக தியேட்டர்களில் படங்கள் வெளியாவதை விட ஓடிடியில் வெளியான பின்னர் தான் சர்ச்சை கிளம்புகிறது. நயன்தாரா நடித்து வெளியான அன்னபூரணி திரைப்படம் தியேட்டரில் வெளியான போது மக்கள் அதை சீண்டக் கூட இல்லை.

ஆனால், அதே படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், வட இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த படத்தையே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து அதிரடியாக நீக்கினர். இந்நிலையில், அதே போல சர்ச்சையை அனிமல் படத்தின் ஓடிடி ரிலீஸ் கிளப்பி உள்ளது.

இதையும் படிங்க: கேபிஒய் பாலா ஒரு பொண்ணோட கையை புடிச்சு காட்டுறாரே!.. அதுல என்ன இருக்குன்னு பாருங்க.. ஒரே ஷாக்!..

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான அனிமல் படம் ஒரு பக்கா சைக்கோ படம் என்றும் கிரிஞ்ச் படம் என்றும் வாந்தி வருது என்றும் பிரபலங்களே காரி துப்பி வருகின்றனர்.

பெண்களை அடிமையாக நடத்துவது, அப்பா மீது பாசம் என சொல்லிக் கொண்டு அரக்கனாக ரன்பீர் கபூர் நடித்துள்ள நடிப்பு அசிங்கத்தின் உச்சமாகவே உள்ளது என கோலிவுட்டில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

அதே சமயம் தெலுங்கு ரசிகர்கள் அனிமல் படத்தை கொண்டாடி வருகின்றனர். காரணம் தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய படம் என்பதால் டோலிவுட் தான் பெஸ்ட் என அவர்கள் கொடியை தூக்கிக் கொண்டு சண்டை போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சரித்திரம்.. சாதனை.. சகாப்தம் படைத்த கேப்டனின் வெற்றிப் படங்கள் – ஒரு பார்வை

இந்த சண்டையில் விஜய்யின் லியோ படம் தான் பயங்கரமாக டேமேஜ் ஆகி வருகிறது. ஏற்கனவே விஜய்யின் தந்தையே லியோ படத்தையும் லோகேஷ் கனகராஜையும் கழுவி ஊற்றிய நிலையில், டோலிவுட் ரசிகர்களுக்கு அது தொக்காக மாறிவிட்டது.

தியேட்டருக்கு சென்று படம் பார்க்காமல் ஒரு மாதம் கழித்து பொறுமையாக ஓடிடியில் படங்கள் வெளியான பின்னர் அந்த படம் சரியில்லை என சண்டை போடும் கலாச்சாரம் சமீபத்தில் தொடங்கி இருப்பது இதன் மூலம் தெரிகிறது. மேலும், மாதம் 200 ரூபாய்க்கு மேல் சந்தா கட்டி நெட்பிளிக்ஸ் ஓடிடியை தென்னிந்தியர்கள் அதிகம் பார்க்கத் தொடங்கி விட்டனர் என்றும் தெரிகிறது.

 

Related Articles

Next Story