சிவாங்கி கொடுக்கும் குடைச்சல்!…கடுப்பாகும் கோலிவுட்…வளரும் நேரத்தில் இது தேவையா?…

Published on: September 19, 2022
sivangi
---Advertisement---

விஜய் டிவி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சிவாங்கி. இவர் கேரளாவை சேர்ந்தவர். குறிப்பாக, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல பாடல்களை பாடியுள்ளார். ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இவர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானர்.

கீச்சு குரல், இன்னசண்ட்டான முகம், குழந்தைபோல் பேச்சு ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவருக்கென ரசிகர்களே உருவாகினர். சிவகார்த்திகேயன் தனது டான் திரைப்படத்தில் இவரை ஒரு சிறிய வேடத்தில் நடிக்க வைத்தார்.

sivangi

டான் திரைப்படத்தின் வெற்றியால் சிவாங்கிக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், தன்னுடைய மோசமான நடவடிக்கையால் பலருக்கும் குடைச்சல் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், கெட்ட பெயரையும் பெற்று வருகிறார் சிவாங்கி என திரையுலகினர் பேச துவங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: “என்னுடைய முதல் படம் அன்னக்கிளி கிடையாது”.. ரசிகர்களுக்கு டிவிஸ்ட் வைத்த இளையராஜா…

ஏற்கனவே, வெளிநாட்டில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும்போது, தன்னுடைய தந்தை,தாய், தம்பி என மொத்த குடும்பத்திற்கும் விமான டிக்கெட், தங்குவதற்கு அறை மற்றும் அவர்களுக்கான செலவுகளை நிகழ்ச்சி நடத்துபவர்களின் தலையில் கட்டி குடைச்சல் கொடுக்கிறார் என செய்திகள் வெளியானது.

தற்போது அவரது நடவடிக்கை பற்றி மேலும் சில செய்திகள் வெளியே கசிந்துள்ளது. வடிவேல் நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் இவரின் நடிப்பு திருப்தி அளிக்காததால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் சுராஜ் நீக்கிவிட்டாராம். ஒருபக்கம், இவர் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இவர் அணியும் ஆடைகளை பார்ப்பதற்காகவும், நடிப்பு பயிற்சி பெறுவதற்காகவும் படக்குழு இவரை பலநாட்கள் அழைத்துள்ளது. ஆனால், அதற்கு சிவாங்கி செல்லவில்லை. தற்போது படப்பிடிப்பு துவங்கிய நிலையில், படப்பிடிப்பு சென்ற சிவாங்கி, உடைகளை பார்த்து ‘இவ்வளவு விலை குறைந்த உடைகளையெல்லாம் நான் அணிய மாட்டேன். அதிகமான விலைக்கு துணிகளை வாங்குகள்’ எனக்கூறிவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் சென்றுவிட்டாராம். இதனால், படப்பிடிப்பு நடைபெறாமல் இருக்கிறது.

வளரும் நேரத்தில் சிவாங்கி செய்வது சரியா?..இது அவரின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல… என சினிமா வட்டாரத்தில் பேச துவங்கியுள்ளனர்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.