Dragon: 72 படங்களில் 5 படங்கள் மட்டுமே ஹிட்.. கோலிவுட்டை காப்பாற்றிய அந்த ஐந்து படங்கள்

Dragon 1
Dragon: கடந்த மூன்று மாதங்களில் 72 படங்கள் வெளியான நிலையில் அதில் ஐந்து படங்கள் மட்டுமே வசூலை குவித்திருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பு தரப்பில் தற்போது ஒரு அறிக்கை வெளியாகியிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் 72 தமிழ் திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றது. இதில் மதகஜராஜா, மர்மர், குடும்பஸ்தன், டிராகன், ஃபையர் உள்ளிட்ட படங்கள்தான் வசூல் சாதனை செய்ததாக கூறப்படுகிறது.
இதன் மூலம் 72 படங்களில் 7 சதவீதம் தான் வெற்றிபெற்றிருக்கிறது. பெரிய படங்களான அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் படம் வெளியாகியிருக்கிறது. அதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாகியிருக்கின்றது. அப்படி இருந்தும் மேற்சொன்ன ஐந்து படங்கள்தான் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சாதனை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் மாதம் இறுதியில் வெளியானது. ஆனாலும் இதனுடைய கலெக்ஷன் ஏப்ரல் மாதம் முதல் வாரத்திற்கு பிறகுதான் தெரியவரும். அது வெற்றிபெற்றதா என்பது அதன் பிறகுதான் தெரியும். டிராகன் திரைப்படம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நல்ல ஒரு கலெக்ஷனை அள்ளியது அனைவருக்கும் தெரியும்.
தமிழ் சினிமாத்துறையை காப்பாற்றுவதற்கு டிராகன் திரைப்படம் பெரும் உதவியாக இருந்தது. மேலும் ஏப்ரல் மாதத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதை போல் சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ் திரைப்படமும் வெளியாக இருக்கின்றது. இந்த படங்களில் வெளியீட்டிற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு ஏற்றம் இருக்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

சமீபகாலமாக தமிழ் சினிமாவை தவிர்த்து பிற மொழி சினிமாக்களைத்தான் தமிழ் ரசிகர்களும் விரும்புகின்றனர். அதற்கு காரணம் பிற மொழிகளில் நல்ல கதையம்சத்தோடு பல படங்கள் ரிலீஸாகிக் கொண்டு வருகின்றன. ஆனால் இங்கு மாஸ், ஆக்ஷன் இதற்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதுவும் கோலிவுட் கீழே போவதற்கு ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.