திரைப்படங்களில் ரசிகர்கள் கவனிக்க மாட்டார்கள் என தப்புக்கள் நடக்கும். அதிலும் இந்த கண்ட்யூனிட்டியை மிஸ் செய்வது நிறையவே நடக்கும். அப்படி, சில சினிமா தவறவிட்ட மிகப்பெரிய தப்புக்கள்.
உன்னை நினைத்து:
சூர்யா, லைலா, சினேகா ஆகியோர் நடிப்பில் உருவான படம் உன்னை நினைத்து. இப்படத்தில் முதலில் லைலாவும், சூர்யாவும் காதலித்து வருவார்கள். அப்போது லைலா பணக்கார காதலன் கிடைத்ததும் இவரை கழட்டி விட்டுவார். அவருக்கு 8 வயது படிக்கும் ஒரு தம்பி படத்தில் இருப்பார். இந்த கதை ப்ளாஷ் பேக்காக படத்தில் சொல்லப்பட்டு இருக்கும். ஒரு வருடம் கழித்து மீண்டும் லைலாவை பார்த்து அவரை மருத்துவ நுழைவு தேர்வு எழுத வைத்து 5 வருடம் படிக்கவும் வைப்பார். இதற்கே 6 வருடம் ஆகிவிடும். ஆனால் சூர்யாவும், லைலாவும் காதலித்த போது 8 வது படித்த தம்பி மட்டும் 8வதிலேயே இருப்பார். ஸ்கூல் கூட பெயிலுனு வச்சாலும், ஆளும் வளராமல் அப்படியே இருப்பார்.
மதுர:
இப்படத்தில் விஜய் கலெக்டராக நடித்திருப்பார். அவருக்கு உதவியாளராக சோனியா அகர்வால் நடித்திருந்தார். வில்லன்களுடம் அவர் மாஸ் வசனம் பேசும்போதெல்லாம் கூட சோனியா இருந்ததால் இவர் கலெக்டரின் உதவியாளர் என அனைவருக்குமே தெரியும். இருந்தும் பசுபதி வீட்டுக்கு சுடிதாரில் இருந்து சேலையை மாற்றிக்கொண்டு மாறு வேஷத்தில் போவார். அட ஒரு மருவ வச்சாவது ஏமாத்திருக்கலாம்.
இதையும் படிங்க: கமல் மிகவும் பிடிவாதக்காரர்!.. அந்த விஷயத்தில ரஜினி சூப்பர்!.. கமலால் வேதனையடைந்த பிரபலத்தின் ஆதங்கம்!..
சீமராஜா:
சிவகார்த்திகேயனுக்கு பெரிய ஃபளாப் படமாக அமைந்தது சீமராஜா தான். இப்படத்திலும் ஒரு அபத்தமான தப்பு இருக்கு. படத்தின் துவக்கத்தில் கதிர் அறுக்கும் போது சூரி பேஸ்புக்கில் லைவ் போடுவார். அது தான் பேஸ்புக்கில் லைவ் ஆவது போல சிவகார்த்திகேயனை காட்டி இருப்பார்கள். ஆனால் அடுத்த காட்சியே சூரி கையில் போனுடன் இருப்பதும் படத்தில் காட்டி இருப்பார்கள். எடிட்டரே கன்பியூஸ் ஆகிட்டாரோ!
மங்காத்தா:
அஜித் நடிப்பில் மாஸ் ஹிட் வெற்றி படமாக அமைந்தது மங்காத்தா. ஆட்டைய போட்ட பணத்தை அஜித்துக்கே டிமிக்கி கொடுத்து விட்டு ப்ரேம்ஜி மற்றும் மகத் எடுத்து சென்று விடுவார்கள். அப்போது தேடிக்கொண்டிருக்கும் போது அஜித் ஒரு வெஸ்டர்ன் யூனினில் சிசிடிவி காட்சிகளை செக் செய்ய சொல்லி இருப்பார். அப்போது காட்டப்படும் சிசிடிவியில் அவர்கள் பேசும் வசனம் கூட வரும். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு!
திருமலை:
இந்த படத்தில் விஜயே குழம்பி இருக்கிறார் போல. ஃபேமஸ் காட்சியாக விவேக்கை வேலைக்கு அழைத்து செல்லும்போது அங்கு சுத்தி இங்கு சுத்தி திருப்பதிக்கே அழைத்து செல்வது போல ஒரு காட்சி இருக்கும். அதில் ஒரு காட்சியில் போலீசிடம் பேசிவிட்டு விவேக் வண்டியில் உட்காருவார். எப்படி போணும் எனக் கேட்கும் போது, விவேக் ரைட்டு போனுட்டு லெஃப்டில் கையை காட்டுவார். இதற்கு விஜய் லெப்டுனு ரைட்டுல கை காட்டுறனு பேசி இருப்பார். அட படிக்கிற நமக்கே குழம்புதே. அந்த காட்சியை பார்க்குறப்ப கண்டிப்பா இத நோட் பண்ணுங்க.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…