More
Categories: Cinema News latest news

ரைட்டு அடுத்த பிரச்னை தொடங்கியாச்சு… லியோ பட தயாரிப்பாளர் மீது கடுப்பில் இருக்கும் லோகேஷ்… சேதி என்ன தெரியுமா?

Lokesh kanagaraj: விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் பல பரபரப்புக்கு இடையே பெரிய அளவிலான வசூலை செய்து முடித்துவிட்டது. இதில் படத்தில் தற்போது ஒரு புது பிரச்னை முளைத்து இருக்கிறது. இதனால் மீண்டும் லியோ பிரச்னை தலைதூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் லியோ படத்தினை தயாரித்து இருந்தார். இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: போர இடமெல்லாம் கன்னிவெடி! விக்ரம் படத்திலயும் படாத பாடு பட்ட அமீர் – 10 லட்சம் கொடுத்தும் புண்ணியமில்ல

அவரின் ஐந்து படங்களில் லியோ தான் அதிக அளவில் விமர்சிக்கப்பட்டது. இப்படத்தின் பாதியை லோகேஷே இயக்கவில்லை. அவரின் அசோசியேட் ரத்னகுமார் தான் இயக்கி இருந்தார் எனவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதெல்லாம் வதந்தி என்று கூட ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் ஓபனாக பேசி இருந்தார்.

இதை தொடர்ந்து ஆடியோ ரிலீஸ் ரத்து, ரசிகர்கள் செய்த சேட்டை, நடன கலைஞர்களுக்கு சம்பள பாக்கி, ப்ரோமோஷன் என எக்கசக்க பிரச்னையை சந்தித்த பின்னரே லியோ திரைப்படம் போராடி திரைக்கு வந்தது. ஆனால் படம் பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்தது. 

கடைசியில் ஒரு இயக்குனராக லோகேஷ் படத்தினை டீகோட் செய்து பேட்டி கொடுக்க வேண்டிய நிலையே ஏற்பட்டது.

இதையும் படிங்க: அமீர் எனக்கு எப்பையுமே அண்ணன் தான்.. அய்யா என்னை மன்னிச்சிடுங்க.. ஞானவேல்ராஜா ட்வீட்..

இதை தொடர்ந்து படத்தின் அதிகாரப்பூர்வ வசூலே 550 கோடியை தாண்டிய நிலையில் இதுவரை படம் 600 கோடி ரூபாயிற்கும் அதிகமாக வசூல் செய்து இருக்கும் எனத் தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து லியோ படத்தின் சக்சஸ் மீட் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. விஜய் குட்டி கதை, த்ரிஷாவின் பேச்சு என பலவையும் வைரலானது. இப்படத்தால் தயாரிப்பாளர் லலித்குமாருக்கு மட்டும் 100 கோடி அளவில் லாபம் கிடைத்து இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இத்தனை வசூலை எடுத்து கூட இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 5 கோடி வரை சம்பள பாக்கி இருப்பதாகவும், அவரின் உதவி இயக்குனர்களுக்கு இன்னமும் சம்பள செட்டில்மெண்ட் எதுவும் லலித்குமார் செய்யவில்லை என்ற ஒரு தகவலும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அப்போ இந்த வார கோலிவுட் பிரச்னை இதுவாக தான் இருக்கும் என ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர்.

இதையும் படிங்க: எல்லாம் வதந்தி! எதையும் நம்பாதீங்க – அவரே சொல்லிட்டாரு! ஏகே 63 பற்றிய புதிய அப்டேட்

Published by
Akhilan

Recent Posts